ஹாலிவுட் படம் அல்ல இது!
===============================================ருத்ரா
ஹாலிவுட் சைஃபை படம்.
செமத்ரில்.
பேனிக்கின் உச்சம்.
எல்லா இடங்களிலும்
சக்கை போடு போடுகிறது.
அடுப்பில் சுட சுட பேக் பண்ணிய
குக்கிகளை
க்ராண்ட்மா குவித்து அடுக்கி
அடுக்கி குவித்து
அப்புறம்
பிணங்களாக
ப்ளாஸ்டிக் பேக்கில்
அய்யோ..என்ன இது?
ஏலியன்கள்
நம் மூளைக்குள்
அவற்றின் மரணகரமான
உலகங்களை
உருவாக்குகின்றனவா?
படம் அல்ல இது.
நம் சாவுகளின்
புள்ளிவிவரங்கள்
வரை படமாக ஏறி ஏறிப்போகும்
பயங்கர நிகழ்வுகளாக
ஹாலிவுட் செட்ட்டிங்கை தாண்டி
நம் முகத்தில் குத்து விடுகின்றன.
முககவங்களையும் தாண்டி
அவற்றின் வலியும் வேதனையும்
நம் கண்ணீர் தளும்பல்களில்
பிம்பங்களைக் காட்டுகின்றன.
அவை வெர்ச்சுவல் ரியாலிடிகள் இல்லை.
நம் மார்ச்சுவரி ரியலிட்டிகள்.
உலக மனிதா?
உன் தேசக்கொடியும் மொழியும்
மற்றும் மதமும் கோட்பாடுகளும்
அதோ
அந்த குப்பைத்தொட்டிக்குள் குவிகின்றன.
வர்த்தக உள் குத்துகளும்
வெளிச்சிரிப்புகளும்
ஏற்கனவே அணிந்த முக கவசங்களை
இப்போது தான் கழற்றுகின்றன.
எங்கே மனிதம்?
எங்கே சக மனித நேயம்?
கொரோனாவின்
கொடிய நாக்குகள்
நம்மை மில்லியன் பிணங்களாய்
சுருட்டிக்கொள்ளுமா?
பொம்மைகளை கொண்டு கட்டிய
மாளிகையா ஐ.நா சபை?
ஆளுக்கொரு "வீட்டொவை"க்கையில்
வைத்துக்கொண்டு
பூமராங் விளையாடும் உங்கள்
கூத்துப்பட்டறையில்
உலகத்தின் தீர்க்கப்பட வேண்டிய
சில நியாய வழக்குகள்
ஒழிந்து மறைந்தனவே.
இலங்கையில் அறம் பிறழ்ந்த
ஒரு படுகொலை
லட்சம் தமிழ்ப்பிணங்களை குவித்தது கூட
வெறும் "சோப் ஓபரா" காட்சிகளாய்
கடந்து போயினவே!
இந்தப்போரிலும்
ஏதோ அரசியலின் "நோய்" தொற்றாமல்
அறத்தோடு நின்று வென்று காட்டு!
உலக மனிதா!
உன் கூரிய நோக்கும் அறிவும்
உன் வீரிய எழுச்சியும்
ஒரு மாமனித திரட்சியாய்
அந்த ஆர்.என்.ஏ அத்துமீறல்களை
அடித்து நொறுக்கட்டும்.
முறி மருந்துகள்
முனை முறியாத உன் முயற்சியில்
வெற்றிகள் குவிக்கட்டும்
நம் தோல்வித்துயரங்கள்
தொலைந்து போகட்டும்.
நம் நம்பிக்கையின் மீது குவியும்
இந்த மரண ஓலங்கள்
மண் மூடிப்போகட்டும்.
புதிய துளிரின் கதிர்வீச்சில்
நாளையப்பொழுது
பொலிவு மிக்க மகிழ்ச்சியின்
புன்னகையாய் விரியட்டும்.
அந்த இனிய நினைப்பில்
தூங்கி விழிப்போம்.
நம் கைகளில் எல்லாம் வசப்படும்.
வெற்றி நமதே!
=========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக