கொரோனா எனும் ஒரு அவதாரம்
===================================================ருத்ரா
கொரோனா
ஏன் அந்த கல்கி அவதாரமாக
இருக்கக்கூடாது?
அவதாரம் என்பது என்ன?
அவதாரம் என்பது எதற்கு?
அது
கடவுளிலிருந்து மனிதனுக்கா?
மனிதனிலிருந்து கடவுளுக்கா?
ஜனனத்தை மரணம் என்றும்
மரணத்தை ஜனனம் என்றும்
மியூட்டேஷன் செய்யும் புராணமா அது?
யாருக்கு
யாரால் பாடம் கற்பிக்கப்படுகிறது?
அதன் உட்பொருள் என்ன?
அதன் வெளிப்பொருள் என்ன?
அது எந்த மொழிக்கு உரியது?
என்ன?
எல்லாமே ஒரு புதிர் ஆகத்தோன்றுகிறதா?
ஆம்.
கொரோனா கூட அப்படி ஒரு
புதிர் தான்.
அதோ பாருங்கள்
பகவானை குதிரையில்
வாளும் கையுமாய்!
முள்ளுடல் என்னும்
முகமூடிக்குள்
வருகிறார்.
அவருக்கு கோவில் வேண்டுமாம்.
மனிதர்கள் அடைக்கப்பட்ட
சவப்பெட்டிகளே
அந்தக்கோவில்!
====================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக