அந்த ரோஜா!
================================================ருத்ரா
ஒரு ரோஜா வாங்கி வந்து
இன்று உன்னிடம்
என் காதலைச்சொல்ல
கடை கடையாய்
ஏறி இறங்கினேன்.
அத்தனையையும்
மலர் வளையங்களுக்காக
அந்த
குரோனா அள்ளிக்கொண்டது.
எனக்கும் அச்சமாகத்தான்
இருக்கிறது.
அடுத்த ஆண்டு
காதலர் தினக் கட் அவுட்டில்
இதயம் உருவம் காட்டுவதற்குப்பதில்
அந்த முள்ளு முகம்
தலை காட்டுமோ என்று.
அன்பே!
அச்சம் வேண்டாம்.
விரட்டி அடிப்போம்.
நம் உடலில் சுரக்கும்
காதல் என்சைம் தான்
அதன் எதிரி.
உயிர் எப்போதுமே
பூத்துக்குலுங்கும் அந்த வனத்தில்
இந்த மரணக்காற்று கண்டிப்பாய்
சாகடிக்கப்பட்டு விடும்.
அது இருக்கட்டும்.
ஒரே ஒரு
புன்முறுவல் தா!
இந்த முகக்கவச பிசாசுகள் எல்லாம்
தொலைந்து போகும்.
வா
அந்த ரோஜாவை
கொரோனாவின் கல்லறைக்கு
காணிக்கை ஆக்குவோம்.
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக