திங்கள், 13 ஏப்ரல், 2020

கொரோனா சொல்லும் பாடம்

கொரோனா சொல்லும் பாடம் 
---------------------------------------------------ருத்ரா 

சங்கிலியை அறுத்துக்கொண்டு 
ஓடும் திருடன் நான்.
அந்த "அமினோ ஆசிட்"
சங்கிலியைத்தான் 
அறுத்துக்கொண்டு  வந்திருக்கிறேன்.


----------------------------------------------------


அடுத்தவன் "செல்கள்"
இருக்கும் போது
பாட்டரியும் சார்ஜும் எதற்கு?
அவனைத் தொற்றிக்கொண்டால் 
போதுமே!



-----------------------------------------------------------




---------------------------------------------------------------

உயிர் இல்லை என்று 
என்னை 
பிண அறைக்குள் கடாச முடியாது.
உயிர் இருக்கிறது என்று 
தொட்டிலில் போட்டு 
ஆட்டவும் முடியாது.


--------------------------------------------------------------------


கோவில்களை 
பூட்டி வைத்துக்கொண்டும் 
லட்சம் லட்சம் உயிர்களை 
எனக்கு பிரசாதமாய் தருகிறாய் !
இது 
கடவுள் என்பதன் 
கேள்வியா?
பதிலா?


---------------------------------------------------------------------------


"ஒலிம்பிக்"
நின்று விட்டதாகவா 
நினைக்கிறாய்?
உனக்கும் எனக்கும் ஆன
ஓட்டப்பந்தயத்தின் 
ஒலிம்பிக் நடந்து கொண்டிருக்கிறது.


--------------------------------------------------------------------------------


உன் சவப்பெட்டியை
ஒரு முக கவசம் வழியாய் 
உன் மூக்கில் 
மாட்டிப்பார்க்க வேண்டும் என்று 
எனக்கு 
ரொம்ப நாளாவே 
ஒரு ஆசை.


---------------------------------------------------------------------------------

"CORONA"...

I WANT YOU TO HAVE IT
MEANS " A CROWN"
BUT
WHY ARE YOU PUT
YOURSELVES IN JAILS?


---------------------------------------------------------------------------------




YOU
DIG ME TO COIN A WORD.
BUT IT IS THE
WIG OF THAT
BURNING AND KILLING "SUN"



---------------------------------------------------------------------------------







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக