புதன், 8 ஏப்ரல், 2020

‍‍‍‍‍‍எல்லாவற்றிற்கும் ஆசைப்படு

"இன்னா நாற்பது" எழுதியது ..கோரோனா
______________________________________________________ருத்ரா

எல்லாவற்றிற்கும்
ஆசைப்படு.
ஆசை எனும் அந்த
மகா மகா மகா..மகா
பூதத்தின்
கார்ட்டுன் இதோ
"கொரோனா"


----------------------------------------------------------

கொரோனா இரைச்சலில்
நம் கழுத்தில்
சுற்றிக்கொண்டிருக்கும்
கருநாகங்கள்
எப்படி
படிக மாலைகளாய்
பஜனை செய்ய வந்தன?

-------------------------------------------------------



அலாவுதீனின் விளக்கு
இந்த "ஜெனடிக் இஞ்சினீயரிங்க்".
மொத்த உலகையும்
இருட்டு ஆக்கவா வந்தது
இந்த விளக்கு?

____________________________________

ஊரெங்கும் தீபாவளி.
கம்பி மத்தாப்பு கொளுத்தி
நம் உயிர்களை புகையாக்கி
களிப்படைந்து கொண்டிருப்பது
கொரோனா

_________________________________

நம் கனவுகளை
அந்தப்பெட்டியில் தான்
வாரிக்குவித்தோம்.
அவை எப்படி இப்படி
கனத்த பூட்டுகளாய்...
நம் மீது?

‍‍‍‍‍___________________________


ஆம்.
இப்போது தான் புரிகிறது.
சாவியையும்
அந்தப் பெட்டியில் போட்டுவிட்டு
பூட்டி விட்டோம்.
அது "அமுக்குப்"பூட்டு.

________________________________________

ஜனநாயம் என்பது
"பண்டோரா பாக்ஸ்"
திறக்காதீர்கள்
சொல்கிறார்கள் அறிவுஜீவிகள்
அவர்களுக்கு
அதுவும் தெரியும்.
உள்ளே இருப்பதும்
வெளியே இருப்பதும்
சர்வாதிகாரம் என்று.

_________________________________________

நத்தைகள் நடந்தன ஊர்ந்தன
ஜாலியாய்
அண்ணாசாலையில்.
டிராஃபிக் ஒழுங்கு செய்து கொடுத்தது
"கொரோனா"

____________________________________

ஸ்மார்ட் ரேஷன் கார்டு.

தந்தை பெயர்....கொரோனா
தாய் பெயர்.......கொரோனா
மகன் பெயர்......கொரானா
மகள் பெயர்.......கொரானா.
செல்ல நாய்க்குட்டியின் பெயர்
....வள் வள் வள்
அதுவும் கொரோனா தான்..
சேமேன்னு போவியா?

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍________________________________________________



‍‍‍‍‍

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக