ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

சிவ நானூறு

சிவ நானூறு
====================================ருத்ரா

அவலும் மிசையும்
ஒரு படுத்தன்ன‌
செல்வமும் வறுமையும்
சமன் செய்யுபு
ஒரு நுண்ணுயிர் தொற்று
ஊழ் படை செய்யும்
மாயம் என் கொல்?
உண்பது நாழி
உடுப்பது நான்கு முழம்.
மன்பதை காக்கும்
கோல் என் கோல்?
அகவும் மஞ்ஞையும்
அகநானூறு முரலும்.
மற்று ஈண்டு
ஈயல் கூட ஓர்
ஆற்றுப்படை யாக்கும்.
கல்லும் புல்லும்
பூவும் புழுவும்
பதிற்றுப்பத்து
கீறித் தரூஉம்
தமிழின் செம்மண்
செம்மை அறிந்தும்
செம்மறிப்படையாய்
திரிதரும் வாழ்வில்
ஓர்மை யாங்கண்
தொலைத்தாய் தமிழா?
பகுத்துண்டு
பல்லுயிர் ஓம்பும்
விழுமியம் மறந்ததே
பெரு வீழ்ச்சி இங்கு.
ஒளிஉறு விழி பெறு
ஓடிடும் கொல் இருள்.
ஓங்கல் பூக்கும்
ஞாயிறு ஒப்பாய்!

===============================================
ஒரு சிவநானூற்றுப்பாடல் இது.
அகம் சிவந்து புறம் சிவக்கும்
ஒரு பொதுமைப்பாடத்தின்
என் சிவ நானூற்றுப்பாடலின்
முதல் பாடல் இது
=============================================ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக