வியாழன், 9 ஏப்ரல், 2020

"கொரோனா" நாற்பது.




"கொரோனா" நாற்பது.
___________________________________________________ருத்ரா
(கொரோனா எழுதிய "இன்னா நாற்பது)





எல்லாவற்றிற்கும்
ஆசைப்படு.
ஆசை எனும் அந்த
மகா மகா மகா..மகா
பூதத்தின்
கார்ட்டுன் இதோ
"கொரோனா"
__________________________________

அலாவுதீனின் விளக்கு
இந்த "ஜெனடிக் இஞ்சினீயரிங்க்".
மொத்த உலகையும்
இருட்டு ஆக்கவா வந்தது
இந்த விளக்கு?

____________________________________

ஊரெங்கும் தீபாவளி.
கம்பி மத்தாப்பு கொளுத்தி
நம் உயிர்களை புகையாக்கி
களிப்படைந்து கொண்டிருப்பது
கொரோனா

_________________________________

நம் கனவுகளை
அந்தப்பெட்டியில் தான்
வாரிக்குவித்தோம்.
அவை எப்படி இப்படி
கனத்த பூட்டுகளாய்...
நம் மீது?

‍‍‍‍‍___________________________


ஆம்.
இப்போது தான் புரிகிறது.
சாவியையும்
அந்தப் பெட்டியில் போட்டுவிட்டு
பூட்டி விட்டோம்.
அது "அமுக்குப்"பூட்டு.

________________________________________

ஜனநாயம் என்பது
"பண்டோரா பாக்ஸ்"
திறக்காதீர்கள் என்று
ஜோல்னாப்பையர்கள்
சொல்லுகின்றார்கள்.
அவர்களுக்கு
அதுவும் தெரியும்.
உள்ளே இருப்பதும்
வெளியே இருப்பதும்
சர்வாதிகாரம் என்று.

_________________________________________

கண்ணில் தெரிவதெல்லாம் காட்சி அல்ல‌
புள்ளிவிவரங்கள் புள்ளிவிவரங்கள்.
இத்தனை
படுக்கைகள் என்று.
இத்தனை
உயிர்கள் போயின என்று.
இத்தனை
ஊரடங்கு மீறல்கள் என்று.
அதற்கு வசூல்
இத்தனை லட்சங்கள் என்று.
கொரோனோ மட்டும்
மனிதர்கள் உருவில் வந்தால்
புள்ளிவிவரங்களால்
அவை
சுருண்டு செத்து விழும்.

___________________________________________

ஜனநாயகம்
அது இது என்று
நாம் போட்டுக்கொண்டிருந்ததெல்லாம்
முக கவசம் தானா?
உள்ளே கொக்கரிக்கிறது
சர்வாதிக்காரம் எனும்
கொரோனா!

_________________________________________
‍‍‍‍‍‍‍
"ரூப் தேரா
கொர்ரானா..
ப்யார் மேரா..
திர்ரானா...
என்ன செய்வது?
"ஆராதனா"
பாட்டு போட்டால்
கொரானா வந்து
பாடுகிறது!
‍‍‍‍____________________________________

ஸ்மார்ட் ரேஷன் கார்டு.

தந்தை பெயர்....கொரோனா
தாய் பெயர்.......கொரோனா
மகன் பெயர்......கொரானா
மகள் பெயர்.......கொரானா.
செல்ல நாய்க்குட்டியின் பெயர்
....வள் வள் வள்
அதுவும் கொரோனா தான்..
சேமேன்னு போவியா?

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍________________________________________________

(தொடரும்)

‍‍‍‍‍

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக