செவ்வாய், 14 ஏப்ரல், 2020

எருமைக்காரன் பட்டி என்றொரு தேசம்!




எருமைக்காரன் பட்டி  என்றொரு தேசம்!
===============================================ருத்ரா 





தமிழா!
திருவள்ளுவர் ஆண்டு
பொங்கல் திருநாளில்
தமிழர் புத்தாண்டை
ஒளி காட்டிய பிறகும்
இருட்டுத்திரையில் ஏன் இந்த‌
சித்திரை சினிமாப்படம்?
இந்த "வருஷப்பிறப்பு"
வரிசையாய் உச்சரிக்கும்
பெயர்களில் 
ஏதாவது உனக்கு
விளங்குகிறதா?
எதுவும் விளங்காமல்
கோயில்கள் செல்கின்றாய்.
தேங்காய் உடைக்கின்றாய்.
கற்பூரம் காட்டுகின்றாய்.
அவர்கள் கொப்புளிக்கும்
சமஸ்கிருத எச்சில்களில்
தமிழை நீ குளிப்பாட்டுகிறாய்.
அதற்கும்
ஊரடங்கு வந்து விட்டதே என்று தான்
தமிழா
உனக்கு வருத்தம்.
ஊர்கள் உன் உரிமை ஆகவில்லையே
என்னும் வருத்தம் கொஞ்சமும் இல்லை
தமிழா
அதற்கு கோபமும் உனக்கு வருவதே இல்லை
தமிழா.
அதோ ஒரு குக்கிராமம் 
எருமைக்காரன் பட்டி என்று
அதுவே உன் தேசம்.
...........................
செந்தமிழ் நாடெனும் போதினிலே...

சட். நிறுத்து.
வடக்கத்திக்காரர்களின்
காதுகளுக்கு அது தீட்டு.
அதனால் 
தமிழும் தமிழ் மண்ணூம்
மாசு பட்டு நின்றது தான்
மிச்சம்.
எடுத்துச்சொன்னாலும் புரியாது.
எழுதிச்சொன்னாலும் புரியாது.
உணர்ந்து சொன்னாலும் புரியாது.
உரத்துச்சொன்னாலும் புரியாது.
சினிமாக்காரர்கள் செய்த‌
மூளைச்சலவையில்
வேட்டியை எடுத்து முண்டாசு 
கட்டியிருக்கிறாய்.
இனி
உன்னிடம் என்ன இருக்கிறது
காப்பாற்றிக்கொள்ள?
தேர்தலின் போது
கோவணம் கிடைக்கும்
அது வரை
ஒளிந்திரு.
தனித்திரு.
பசித்திரு.
உன் சவப்பெட்டியை
நீயே சுமந்துவர தோள் கொடுக்கவும்
காத்திரு.
தமிழா காத்திரு!
சாலை ஓரங்களில்
அகதிகளாய் நீ அலைந்து திரிய‌
இந்த 
"கொரோனா"வை வைத்து
ஒத்திகைப்பார்த்து
காத்திரு 
தமிழா காத்திரு.

=======================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக