சனி, 25 ஏப்ரல், 2020

அச்சமில்லை.அச்சமில்லை

அச்சமில்லை.அச்சமில்லை
======================================ருத்ரா

உன் மீது
எங்களுக்கு பயமில்லை.
உன் மீது
எங்களுக்கு வெறுப்பில்லை.
உன் மீது
எங்களுக்கு பகைமையில்லை.
இப்படி
ஒளிந்து மறைந்து
கண்ணாமூச்சி ஆடுவதும் கூட‌
ஒரு விளையாட்டு.
நீ
எங்கள் எதிரியில்லை.
ஆனால்
கொரோனாவே
ஆயிரம் ஆயிரம் கொரோனாக்கள்
அஞ்சி நடுங்கும்
ஒரு நோய் எங்களை
ஆட்டிப்படைக்கிறது.
அது தான் இங்குள்ள
சாதி மத வேறி என்பது.
அது ஒளிந்து கிடந்து
எங்களை தாக்கும்.
நீ
எங்கள் நுரையீரலைத்தானே
தின்கிறாய்!
இது
எங்கள் இன மாண்புகளை
எங்கள் உயிர் மொழியை
எங்கள் மனித நீதியை
தின்று செறித்துவிடத்
துடிக்கின்றன.
அவை
"தீண்டாமை"எனும் கொடுங்கரத்தால்
எங்களை
ஊரடங்கு மட்டும் அல்ல
இந்த தேசத்தை விட்டே
வெளியே வீசியெறிந்து விட
வெறி வளர்த்து அலைகின்றன.
எங்கள் மண்ணை
அந்த மானிட வாசனையை
கருவறுக்கும்
அந்த கொடிய நோய்
பத்திரமாய் படுத்துக்கிடக்கும்
இடம் எது தெரியுமா?
எங்கள் ஓட்டுகளே!
விண்ணை இடிக்கும் கோயில்களை
கட்டியவர்கள் நாங்கள்.
இப்போது எங்கள்
மொத்தக்கல்லறையை
கட்டிக்கொண்டிருக்கிறோம்
அல்ல அல்ல‌
கட்டி முடித்துவிட்டோம்
அந்த ஓட்டுக்களைக்கொண்டு.
கொரோனாவே
இவர்களின் நான்கு வர்ணக்கதிர் வீச்சில்
நாங்கள் ஏற்கனவே
காணாமல் போய்விட்டோம்.
உன்னைக்கண்டு அச்சமில்லை.
நீ எங்களுக்கு
துச்சம் துச்சம் துச்சமே!

===========================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக