வியாழன், 2 ஏப்ரல், 2020

கவலைப்படாதே

கவலைப்படாதே
=======================================ருத்ரா


இப்போது
இது தான் எல்லோருக்கும்
மருந்து.
கவலைகளின் குப்பைகள்
கோபுரமாய் மண்டிக்கிடக்கிறதே
அதன் மீது இருந்துகொண்டா
கவலைப்படாதே
என்பது?
ஆம்.நம் நாட்டில்
கவலைகள் கூட கடவுள்கள் தான்.
கடவுளைக்கும்பிடும்போது
என்ன செய்கிறோம்?
நம் குப்பைகளைக்கொண்டே
கடவுளை நீராட்டி கழுவி
புத்தாடை சூட்டி
பூசனை செய்கிறோம்.
நம் கவலைகளையும்
அந்த கவலைகளைக்கொண்டே
அபிஷேகம் செய்து
ஆராதனை செய்துகொள்வோம்.
கவலைகளை
கவலைப்படுவதைக்காட்டிலும்
இப்படி
ஆராதித்தலே
"அதனை அடுத்து ஊர்வது அஃதொப்பது இல்"
என்று கூறிவிட்டார்
வள்ளுவர்.
ஊடகங்கள்
கொரோனாவுக்கு
இப்படித்தான் 
விழா எடுத்துக்கொண்டிருக்கிறன.
அந்த அடுக்கடுக்கான‌
புள்ளிவிவரங்களே
அந்த கவலைக்கடவுளுக்கு
அர்ப்பணிக்கும்
அர்ச்சனைப்பூக்கள்.
கவலைப்படாதே.
எந்த கவலையைப்பற்றியும்
கவலைப்படாதே.
அந்த முள்ளுவைரஸின்
முனையை மழுங்கடிக்க‌
இதை விட மருந்து 
ஏதுமில்லை.

===============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக