செவ்வாய், 28 ஏப்ரல், 2020

இலை இல மலர்ந்த முகை இல் இலவம்

இலை இல மலர்ந்த முகை இல் இலவம்
=======================================ருத்ரா
(ஓலைத்துடிப்புகள் -21)


என்பு நீண்டதொரு கணு உடல் இலவம்
வானம் இலை தொட்டு வடிநீர் பருக
நாவாய் ஆட்டும் நளியிலை இரட்ட
எரிப்பூவின் அவிர் இணர் சொரியும்
செந்தீயும் ஆங்கே கல்லின் பரற்கண்
பிழம்பின் யாறென இழிபடு நிரவலில்
கதழ் பரிக்  கலிமா கடி மணல் சிதைய
கான் ஊடு ஊசி கூர்த்தன்ன அவன்
கலுழ் செய் சூர் தொடு பொருள் வேட்டலில்
மீக்கூர்  துன்பம் மேனி வருத்த
இறை நெகிழ் இவள் தொடியிடை
இலை இல மலர்ந்த முகை இல் இலவம்
ஏங்கிய வெளியை வாங்கியே நோக்கும்
ஓமை வரிய வறுங்கிளை நீவும்
சேவல் எதிர்க்கும் அணிமென் பேடை
வாராது நோன்புழி அளி பட்டன்ன
அன்றில் நரலும் நெடுங்கண் நாளின்
அனல் பூஞ் சேக்கை  அவியல் வீழ்ந்தாள்.

================================================
(ஒவையார் எழுதிய அகநானூற்றுப்பாடல் 11ல் எழில் மிக்க காட்சி நயம் செறிந்த ஒரு வரி வருகிறது.அது தான் நான் எழுதிய இச்சங்க நடைக்கவிதையின் தலைப்பு)

=====================================ருத்ரா 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக