ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

பிரம்ம முகூர்த்தம்

பிரம்ம முகூர்த்தம்
==========================================ருத்ரா



ஒருத்தர்
ரெண்டு பேர்
அங்கும் இங்கும்
வந்து
முகம் மறைத்து வந்தால்
அவர்கள்
முகமூடிக்கொள்ளைக்காரர்கள்.
என்று நாம் நினைக்கலாம்.
ஆனால்
ஓட்டுப்போடும்
நூத்திமுப்பது கோடி சொச்சமும்
இப்படி
மூக்கு கவசம் போட்டுக்கொண்டதால்
என்ன நடக்குது இங்கே
என்று விக்கித்துப்போய் நிற்கின்றோம்.
கொரானா சின்னத்தில்
யார் இங்கே ஓட்டு கேட்கிறார்கள்?
மூச்சு விட ஜனநாயகம் இங்கே
மிஞ்சி நிற்குமா?
விரல் படாமலேயே
பட்டன்கள் தட்டப்பட்டு விடுமா?
இது நோய் தான்.
ஐயமில்லை.
நூறு சதவீதம் தொற்று
உறுதி செய்யப்படும்போது
மொத்த மனிதமும்
குவாரண்டைன் கூடாரத்தில் தான்.
ஜனநாயகம் முழுவதும்
ஒரு மாதிரியான‌
டிடென்ஷன் கேம்பில் தான்.!
ரத்தப்பரிசோதனைகள்
நடந்து கொண்டிருக்கும்
அந்த பிரம்ம முகூர்த்தத்தில்
மசோதாக்களும்
நூற்றுக்கணக்காய்
சட்டம் ஆகி விடலாம்.
எந்த வியாசன்
எந்த இதிஹாசத்தை
இங்கு எழுதிக்கொண்டிருக்கின்றானோ?
"கொரானா"
ஏதோ புரியாத ஸ்லோகங்களை
சொல்லிக்கொண்டிருக்கிறது.

================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக