கிளி ஜோஸ்யக்காரன் பெட்டிகள்
====================================================ருத்ரா
கடவுளை நினைப்பவனே மனிதன்.
கடவுள் இஸ் ஈக்குவல் டு மனிதன்
என்று
அத்வதம் சொன்ன பிறகு
மனிதனை நினைப்பவனே இங்கு கடவுள்.
முன்னவன் ஆத்திகன் என்றும்
பின்னவன் நாத்திகன் என்றும்
பாஷ்யங்கள்
"மயிர் பிளக்கும்" வாதங்களில்
நம் மனம் பிளந்து தருகின்றன.
பாதாதி கேசம் பிரம்மன் தான் என்று
சொல்லிய பிறகு
காலில் சூத்திரன் என்றும்
தலையில் பிரம்மன் என்றும்
அது என்ன "புதிய வர்ண மெட்டில்"
சங்கீதம்?
காலடியில் பிறந்தவருக்கு கூட
காலடி மக்கள் எனும்
சூத்திர வர்ணம் எப்படி உடன் பாடு ஆனது?
எம்மதமும் சம்மதம் என்பதே இந்து மதம்
என்று சொல்லிய பிறகு
இந்திய மண்ணில் மற்ற மதங்களின்
தடயங்களை அழிப்பதே
இந்துத்துவம் என்பது
என்ன தத்துவம்?
கொலம்பஸ் கடல் அலைகளோடு போராடி
மரணத்தையும்
மடி மீது ஏந்தி கப்பல் ஓட்டி
இந்தியாவை தேடியது
மதங்களை தாண்டிய அந்த
அந்த "பொதுமை ஒளிக்கு"த் தானே!
அந்த வெளிச்சத்தையே "போலியானது" என்று
அணைக்க
அரசியல் சாசனத்தின் ஷரத்துக்குள்
"புற்று நோய்"க்கிருமிகளை
புகுத்துவது என்ன ஜனநாயக தத்துவம்?
அன்றாட வாக்குப்பெட்டி ஒன்று
மனிதனின் மதத்துக்கு வைக்க வேண்டியுள்ளது.
சந்தர்ப்பத்தை வைத்து
வேண்டும் என்றோ வேண்டாம் என்றோ
இருக்கிறது என்றோ இல்லை என்றோ
வாக்குச்சீட்டு போடுபவனே
இன்றைய மனிதன்.
சமுதாய பிரச்னைகளின்
கூர்மையும் நுண்மையும்
தெரியாத அறிவு ஜீவிகளால்
எழுத்துக்கள் மட்டுமே
டன் டன்களாய் குவிக்கப்படுகின்றன.
பொறியியல் பல்கலைக்கழகங்கள்
வெறும் வேட்டைக்கான அம்புக்கூடுகள்
மாத்திரமே.
மனிதனுக்கு மனிதன் முகர்ந்து கொள்ளும்
மானிட நேயத்தின் வாசனையில்லாத
இந்த பிளாஸ்டிக் இதயங்களின்
காடுகளில்
"யாதும் ஊரே யாவரும் கேளிர் "
என்ற வரிகள்
உயிர்ப்போடு பதியம் ஆகும் வரை
இவர்களின் புத்தக விழாக்கள் கூட
நீள நீளமாய் மிளகாய் பஜ்ஜிகளும்
பஞ்சு மிட்டாய்களும்
விற்கப்படும் "ஸ்டால்"களின்
தொகுப்புகள் மட்டுமே.
கணினிகளுக்கும் பஞ்சமில்லை.
பஞ்சாங்கங்களுக்கும் பஞ்சமில்லை.
எதிர்ப்படும் இருட்டில் நுழைய
வெளிச்சமும் வேண்டும் அறிவும் வேண்டும்.
இரண்டும் இல்லாமல்
இவர்கள் வைத்திருக்கும்
லேப் டாப்கள் கூட
வெறும் கிளி ஜோஸ்யக்காரன் பெட்டிகள் தான்.
======================================================
====================================================ருத்ரா
கடவுளை நினைப்பவனே மனிதன்.
கடவுள் இஸ் ஈக்குவல் டு மனிதன்
என்று
அத்வதம் சொன்ன பிறகு
மனிதனை நினைப்பவனே இங்கு கடவுள்.
முன்னவன் ஆத்திகன் என்றும்
பின்னவன் நாத்திகன் என்றும்
பாஷ்யங்கள்
"மயிர் பிளக்கும்" வாதங்களில்
நம் மனம் பிளந்து தருகின்றன.
பாதாதி கேசம் பிரம்மன் தான் என்று
சொல்லிய பிறகு
காலில் சூத்திரன் என்றும்
தலையில் பிரம்மன் என்றும்
அது என்ன "புதிய வர்ண மெட்டில்"
சங்கீதம்?
காலடியில் பிறந்தவருக்கு கூட
காலடி மக்கள் எனும்
சூத்திர வர்ணம் எப்படி உடன் பாடு ஆனது?
எம்மதமும் சம்மதம் என்பதே இந்து மதம்
என்று சொல்லிய பிறகு
இந்திய மண்ணில் மற்ற மதங்களின்
தடயங்களை அழிப்பதே
இந்துத்துவம் என்பது
என்ன தத்துவம்?
கொலம்பஸ் கடல் அலைகளோடு போராடி
மரணத்தையும்
மடி மீது ஏந்தி கப்பல் ஓட்டி
இந்தியாவை தேடியது
மதங்களை தாண்டிய அந்த
அந்த "பொதுமை ஒளிக்கு"த் தானே!
அந்த வெளிச்சத்தையே "போலியானது" என்று
அணைக்க
அரசியல் சாசனத்தின் ஷரத்துக்குள்
"புற்று நோய்"க்கிருமிகளை
புகுத்துவது என்ன ஜனநாயக தத்துவம்?
அன்றாட வாக்குப்பெட்டி ஒன்று
மனிதனின் மதத்துக்கு வைக்க வேண்டியுள்ளது.
சந்தர்ப்பத்தை வைத்து
வேண்டும் என்றோ வேண்டாம் என்றோ
இருக்கிறது என்றோ இல்லை என்றோ
வாக்குச்சீட்டு போடுபவனே
இன்றைய மனிதன்.
சமுதாய பிரச்னைகளின்
கூர்மையும் நுண்மையும்
தெரியாத அறிவு ஜீவிகளால்
எழுத்துக்கள் மட்டுமே
டன் டன்களாய் குவிக்கப்படுகின்றன.
பொறியியல் பல்கலைக்கழகங்கள்
வெறும் வேட்டைக்கான அம்புக்கூடுகள்
மாத்திரமே.
மனிதனுக்கு மனிதன் முகர்ந்து கொள்ளும்
மானிட நேயத்தின் வாசனையில்லாத
இந்த பிளாஸ்டிக் இதயங்களின்
காடுகளில்
"யாதும் ஊரே யாவரும் கேளிர் "
என்ற வரிகள்
உயிர்ப்போடு பதியம் ஆகும் வரை
இவர்களின் புத்தக விழாக்கள் கூட
நீள நீளமாய் மிளகாய் பஜ்ஜிகளும்
பஞ்சு மிட்டாய்களும்
விற்கப்படும் "ஸ்டால்"களின்
தொகுப்புகள் மட்டுமே.
கணினிகளுக்கும் பஞ்சமில்லை.
பஞ்சாங்கங்களுக்கும் பஞ்சமில்லை.
எதிர்ப்படும் இருட்டில் நுழைய
வெளிச்சமும் வேண்டும் அறிவும் வேண்டும்.
இரண்டும் இல்லாமல்
இவர்கள் வைத்திருக்கும்
லேப் டாப்கள் கூட
வெறும் கிளி ஜோஸ்யக்காரன் பெட்டிகள் தான்.
======================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக