ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

ஜூங்கா- 2



ஜூங்கா- 2
===========================================ருத்ரா


விஜயசேதுபதி அவர்களே.
தாத்தா அப்பா வழியே
அந்த நகைச்சுவைக்கொடி ஏறி
அந்த விண்ணையும் பிளந்து
விலா வலிக்க செய்யும்படி
சிரிக்கவைத்த
சிலிர்ப்புச் சக்கரவர்த்தியே!
நிழல் உலக தாதாக்கள் என்றால்
கொலைக்காடுகளின்
ரத்த ரங்கோலிகளில்
கதை ஓட்டத்தை நகர்த்துவது தானே
மாமுல்.
ஆனால் இந்த படம் வித்தியாசமானது.
விஜய்சேதுபதி
முதன் முதல் நடிப்பை நடிப்பாகாவே
காட்டாமல்
பிலிம்களின் தளும்பல்களில்
அலைச்சிதறலாய்
தன முதல் படத்தில் அசத்தியிருந்தாரே
அதன் முத்திரை
மேலும் தங்கமுலாம் ஏறி
நம்மை வியக்க வைக்கிறது.
கமலின் நாயகன் பாணி
வேறு ஒரு முற்றிலும் வேறுபட்ட
கோணத்தில்
படத்தை கொண்டுசெல்கிறது.
ஏகே 47ம் மற்றும் லென்ஸ் மாட்டிய
துப்பாக்கிகளும் வேட்டையாட வேண்டிய
களத்தில்
காமெடி கலாட்டாவே இங்கு
பயங்கர ஆயுதம்.
இதில் காதலுக்கும்
பொருத்தமான
ரோஜாசெண்டுகளை செருகி
கிச்சு கிச்சு தாம்பாளம்
கியா கியா தாம்பாளம்
நன்றாகவே ஆடியிருக்கிறார்.
சாயிஷாவுடன் அந்த
கிளுகிளுப்பு காட்சிகள் அருமை.
சென்னைக் குப்பங்களுக்கு
நடுவே உள்ள "பாரிசில்"
ஃ பிரான்சின்  ஈஃபில்  கோபுரம்
தேடி தேடி விளையாடும்
சடு-குடு படு சுவாரஸ்யம்.
பொன்வண்ணன்  சரண்யா
பாத்திரங்கள் ரொம்ப
கல கல கல  கல....
பாட்டியாய் வருபவர்
விஜய சேதுபதிக்கு
செம லொள்ளு ஊட்டிவிடுகிறார்.

கூடவே ஒட்டி வரும்
யோகிபாபுவின் அந்த
பம்பைத்தலைக்குள்
படத்தின் மொத்த காமெடியும்
சுருட்டி வைக்கப்பட்டு
அவ்வப்போது ஐந்து தலை நாகமாய்
சிரிப்பு வெடிகளை சீறவைக்கின்றன.
அந்தக்காலத்து
சபாஷ் மீனா போல்
சிவாஜியும் சந்திரபாபுவுமாய்
உங்கள் இருவர் கூட்டணி
தியேட்டரையே கலக்குகிறது.
ரங்கா ..லிங்கா ..வோடு
இந்த "ஜுங்கா" போகும்
ரோலர் கோஸ்டர் கேம்ஸ்
நம்மை ஜாலியாகவே
கிரு கிறுக்க வைக்கிறது.
மூன்று பெயரில்
மூவேந்தராய் வந்து
வெற்றிக்கொடி நாட்டி விட்டு
போயிருக்கிறார்
விஜயசேதுபதி.

=====================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக