செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

"ஆத்மாநாம்" எழுதிய வேலண்டைன் கவிதை


"ஆத்மாநாம்" எழுதிய வேலண்டைன் கவிதை 
==========================================ருத்ரா இ பரமசிவன் 


"ஒரு கூரை மேல்
காக்கைக்கும் அணிலுக்கும் சண்டை
அணில் துரத்த காக்கை பறந்தது
காக்கை பறக்க அணில் தாவியது
முடிவில்
அணில் பறந்தது
காக்கை ஓடியது
ஒன்றுக்கும் ஒன்றும் ஆகவில்லை"

---------------------------------------------------------


http://chenthil.blogspot.in/2008/03/athamanaam.html


இந்த வலைப்பூவுக்கு நன்றி.


-----------------------------------------------------------------


கவிஞர் அமரர்  ஆத்மாநாம் வெளிப்படையாக 

எழுதவில்லை வேலண்டைன் கவிதை.
ஆனால் மேலே எழுதிய அந்த கவிதையைப்பாருங்கள்!
ஒன்றுமே இல்லாமல் ஒன்றுமே பேசாமல் 
சிரித்துக்கொண்டிருப்பார்கள்.
"ஒன்றுக்கும் ஒன்றும் ஆகவில்லை"
என்பது போல் 
அந்த "காக்கை அணில் விளையாட்டு" தான்
காதல்.
காதல் எல்லாம் கல்யாணத்தில் முடிவதில்லை.
கல்யாணம் எல்லாம் காதலோடு வருவதில்லை.
அதுவே வாழ்க்கை!
அந்த வாழ்க்கையையே காதலிப்பது கூட 
ஒரு தெய்வீகக்காதல் தான்!

===========================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக