திங்கள், 20 பிப்ரவரி, 2017

சிரிப்பு வனங்கள் (பேப்லோ நெருதா)

Image result for pablo nerudaImage result for pablo nerudaImage result for pablo nerudaImage result for pablo nerudaImage result for pablo neruda


Pablo Neruda

Poet
Pablo Neruda was the pen name and, later, legal name of the Chilean poet-diplomat and politician Ricardo Eliécer Neftalí Reyes Basoalto. He derived his pen name from the Czech poet Jan Neruda. Neruda won the Nobel Prize for Literature in 1971.

சிரிப்பு வனங்கள் (பேப்லோ நெருதா)


 YOUR LAUGHTER
============================================PABLO NERUDA


Take bread away from me, if you wish,
take air away, but
do not take from me your laughter.

Do not take away the rose,
the lance flower that you pluck,
the water that suddenly
bursts forth in joy,
the sudden wave
of silver born in you.

My struggle is harsh and I come back
with eyes tired
at times from having seen
the unchanging earth,
but when your laughter enters
it rises to the sky seeking me
and it opens for me all
the doors of life.


யுவர் லாஃப்டெர்
===================================பேப்லோ நெருதா
"சிரிப்பு வனங்கள்"

என் சோற்றை பிடுங்கிக்கொள்.
வேண்டுமானால் என் உயிர்
ஊற்றையும் உறிஞ்சிக்கொள்.
எனக்குள் உற்சாகத்தின் வேர்த்தூவிகளாய்
நிரவிவிட்ட‌
உன் சிரிப்பே
என் மூச்சு சோறு எல்லாம்.
அதைக் கொண்டு சென்று விடாதே!

அந்த சிரிப்பு ரோஜாவை பிடுங்கிக்கொண்டு
ஓடிவிடாதே!
அந்த முள்ளுப்பூவில்
நம் சோகங்கள் உருவகமாய் ஒட்டிக்கிடக்கும்.
அவை முட்களா ?
என் வேகத்துக்கு வெறியூட்டும்
தார்க்குச்சியின் "அமுத" முனைகள் அவை!
விலா தெறிக்க‌
அந்த சோகம் பதுக்கிய வெடிச்சிரிப்புகள்
சந்தோஷ வெள்ளத்தை
அலையடிக்கச்செய்யும் நீர்த்தளும்பல்களில்
கண்ணீர்ப்பூக்களாய்
சொரியும் சிரிப்புகள்.
அப்போது திடீரென்று
வெள்ளி உருக்கிய சுடர்விரிப்புகளாய்
பளிங்கின் சிரிப்பு
உன் மரணத்தின் விளிம்பு ஓரத்து ஜனனம் அது!


போதும் போதும்!
எத்தனை யுத்தங்கள்?
வாழ்வதற்காக சாவு!
சாவதற்காக போராடு!
போராடுவதற்காக சாவு!
மீண்டும் ...
வாழ்வதற்காக போராடு!
என் கண்கள் களைத்துவிட்டன.
சம்பவங்கள்
உலகம் எனும் பாறாங்கல்லை
ஒரு இன்ச் கூட நகர்த்தவில்லை.
நொறுங்கிக்கிடக்கும்
நம் கபால மேடுகளிலிருந்து
நான் பார்க்கிறேன்.
உலகம் அசைவற்ற வெறும் பிணம்.
ஆனால் உன் சிரிப்பு
உள்ளே நுழைகையில்
அது வானம் முட்டுகிறது.
அங்கே வந்து என் மனம் வருடுகிறது.
இருட்டுக்கர்ப்பத்தில்
சுருண்டு கிடக்கும் எனக்கு
விடியல்களின்
எல்லா வாசல்களையும்
திறந்து வைக்கிறது.


===============================================
(சிரிப்பு இன்னும் தொடரும்)
==============================================
மொழி பெயர்ப்பு : ருத்ரா இ பரமசிவன்

2 கருத்துகள்:

Nagendra Bharathi சொன்னது…

அருமை

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

மிக்க நன்றி அன்பு நண்பரே

கருத்துரையிடுக