திங்கள், 20 பிப்ரவரி, 2017

பிரபஞ்சத்தில் ஒரு ரிக்கார்டு டான்ஸ்?


கண்முன்னால் ஒரு கருந்துளை
==================================================ருத்ரா இ பரமசிவன்.
http://www.msn.com/en-us/video/wonder/first-image-of-a-black-hole-could-be-taken-in-april/vi-AAn1ZnR?ocid=spartanntp

(THANKS FOR THE ABOVE LINK)

=================================================
பிரபஞ்சத்தில் ஒரு ரிக்கார்டு டான்ஸ்?நம் சூரியனைப்போல் பல மில்லியன் மடங்கு பெரிதான ஒரு விண்மின்  தனது ஈர்ப்பு ஆற்றலால் தன்னையே நசுக்கி ஜு ஸ்  போட்டு குடித்து ஒரு கருப்புக்குழியாய் அல்லது கருந்துளையாய் முடித்துக்கொண்டுவிட்ட
பிரபஞ்சத்தின் "ஒரு தற்கொலையை" படம் பிடிக்க போகிறது "நாசா".
பூமியில் உள்ள எல்லா தொலைநோக்கிகளையும் "உருட்டி த்திரட்டி" உருவாக்கினாற் போல "ஒரு தொலைநோக்கித்தோற்றத்தை"(வெர்ச்சுவல்
டெலஸ்கோப்) அமைத்து நம் பிரபஞ்சத்தின் "நிகழ்வு முனை விளிம்பை"
(ஈவண்ட்  ஹாரிஸான்) உற்று நோக்கப்போகிறோம் நாம்.வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் இது நிகழ இருக்கிறது.

அந்தத் ந்துளை என்பது பிரபஞ்ச்சத்தின் "மின் காந்த அலைகள் "(அல்லது ஒளி ஆற்றல் அலைகள்") முட்டி மோதி மீண்டும் பிரபஞ்சத்தை நோக்கி திரும்பிவரும் "விளிம்பு" அல்ல.அந்த துளை இந்த அலைகளையெல்லாம் தனக்குள் உறிஞ்சிக்கொண்டு விடும்.நம் பரப்பின் கடைசி மைல்கல் இந்த கருந்துளை.இந்த துளைக்குள் என்ன நடக்கிறது என்ற நிகழ்வு நமக்கு தடை
செய்யப்பட்டிருக்கிறது என்கிறார் இங்கிலாந்து இயற்பியல் கணிதவியல்
மேதை டாக்டர் பென்ரோஸ் .அது பிரபஞ்சத்தின் தணிக்கை  (cosmic censor) என்கிறார் அவர்.தணிக்கை செய்யப்பட்ட அந்த படத்தில் (நிகழ் வில்) என்ன நடந்து கொண்டிருக்கும்?

குத்தாட்டமா?
ரிக்கார்டு டான்சா?

நமக்கு திரைப்படங்கள் தாண்டி செல்லத்தெரியாது.ஆனால் அறிவியல் மேதைகள் அறிவியல் கற்பனை கொண்டு ஊடுருவிசெல்கிறார்கள்.
ஒளியின் வேகம் (அல்லது மின்காந்த அலைகளின் வேகம்) இந்த பிரபஞ்சத்து எல்லையான "வினாடிக்கு 1 86 000 மைல்கள் "என்னும் விதி அந்த கருந்துளைக்கு அப்பால் அல்லது அந்த துளை வழியே உடைத்து நொறுக்கப்படுகிறது. அங்கே "ஒளிமீறிய" வேகம் (SUPER LUMINOUS VELOCITY)
உண்டாகிறது.அந்த ஆற்றல் துகள் "டெ(க்யான்"என்று அழைக்கப்படுகிறது.
இந்த "புழுத்துளை"(WORM HOLE) வழியாக நம் பிரபஞ்சத்துக்கு நேர் மாறான ஒரு பிரபஞ்சத்துக்கு போய்விடலாம்.இயற்பியல் அறிவியலின் "குவாண்டம்
டெலிபோர்ட்டேஷன்" எனும் நுட்பம் மூலம் "அண்டம் விட்டு அண்டம் தாவும்" ஸ்டேஷன்கள் இந்த கருந்துளையுட் செல்லும் புழுத்துளை யுள் அமைக்கப்படலாம்.இந்த அறிவியல் கற்பனைகள் தற்போதைய "குவாண்டம் டன்னலிங்"(QUANTUM TUNNELING) எனும் இயற்பியல் கணக்கீடுகள் இட்டுசெல்லும் ஒரு தடமாகும். விண்வெளி மனிதர்கள் (ஏலியன்கள்) அந்த ஒளி மீறிய வேகத்தில் வந்து தான் இங்கு வந்து கலக்கிவிட்டுப் போகிறார்கள் என்கிறார்கள் அறிவியல் கற்பனையாளர்கள்.

போவோமா புது "அண்டம்"?


===================================ருத்ரா இ பரமசிவன்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக