வியாழன், 2 பிப்ரவரி, 2017

மூணுக்குள்ள நாலு சிங்கங்கள்

மூணுக்குள்ள நாலு சிங்கங்கள் (சூர்யா)
===========================================ருத்ரா

சிங்கம் 3 ன் உறுமல்
சேடலைட் வழியா
கேக்கப்பொவுதாம்.
நூறு கோடிக்கு வித்தாச்சு!
ஓ அனிமல் ப்ளேனட சிங்கங்களே
கொஞ்சம் ஓரமா போய்
சாதுவா உக்காருங்க!
எங்க சூர்யா சிங்கத்துக்கு முன்னாலே
நீங்கல்லாம்
பஞ்சடைச்ச பொம்மைங்க தான்.
சிங்கம் மூணு
ரொம்ப டக்கரா கர்ஜிக்கிது டீசர்ல.
அது
எம் ஜி எம் சிங்கம் கணக்கா
கர் புர்ர்னு
ரெண்டாவது சவுண்டு விடுறதுக்குள்ள‌
பாத்தாக்க‌
சிங்கம் 4 அடுத்த கதை ரெடி.!
சூர்யா அவர்களே
காவல் உடையில்
காக்கிக்காடுகளுக்குள்
சிலித்தெழும் சிங்கமாய்
ரசிகர்களை மிகவும் களிப்படைய வைத்து
உங்கள் குகைக்குள் கூட்டி வந்து
கிடுகிடுக்க வைத்து விட்டீர்கள்.
இப்படி
மசாலாப்படங்களில் கூட‌
அற்புதமாய் மத்தாப்பு கொளுத்துகிறீர்கள்.
சிங்கம் மார்க் பாட்டசுகளாய்
ரசிகர்கள் நெஞ்சில்
நீங்கள் வலம் வருவதே
இவர்களின்
தீபாவளித்திருவிழாக்கள் !

===========================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக