செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

நன்றே செய்வோம்

நன்றே செய்வோம் இன்றே செய்வோம்
=============================================ருத்ரா

வாரிக்குவித்தீர் ஓட்டுகளை!
இந்த தீவட்டிக்கொள்ளைக்கா
அவசரப் பட்டீர்?

நீதியை கல்லறைத்தோட்டத்தில்
புதைத்தவரிடமா போய்
புதைந்தீர்கள்?

சுட்டெரித்தது நீதி!
ஊழல் முகங்கள் அத்தனையும்
சாம்பல் சாம்பல் சாம்பல் தான்.

தூண்டில் புழுவாய் இலவசங்கள்
தூண்டில் மீன்களோ
நீங்கள் தான்!

நீங்களே போட்ட‌ ஓட்டுக்கள்.
உங்கள் தலை சொறியும்..தீக்
கொள்ளிகளா?

"கைப்பேசிகளின்" யுகம் இதுவே!
காலம் மாறும் என்பதெல்லாம்
பத்தாம் பசலிக் கொள்கைகளே!

நேனோ செகண்டில் எல்லாமும்
தலை கீழ் ஆகும்
அறிவீரோ?

குவாண்டம் மெகானிக்ஸ் சமுதாயம்.!
கண்ணீர்க்கதைகள்
தேவையில்லை.

செவ்வாய்க் கோளின் மண்ணெடுத்து
புதிய மனிதன் உருவாக்க‌
புறப்பட்டுவிட்டான் புது மனிதன்.

பஞ்சாங்கத்துக்   குப்பைகளும்
பாவ புண்ணிய பொய்மைகளும்
தூக்கியெறி! தூக்கியெறி!

நூத்தினாலு விண்கோள்கள்
அனுப்பிய பின்னர் உடைப்பார்கள்
நூத்தியெட்டுத் தேங்காய்கள்.

விஞ்ஞானங்கள் வளர்கையிலே
பொய்ஞானங்களும்... கூட‌
வரலாமோ?

ஜனநாயகம் எனும் அர்த்தமிங்கு
சர்வாதிகாரமா
சிந்திப்பீர்!

நாலரையாண்டு பொறுப்பதற்குள்
நாட்டின் வளங்கள்
ஏப்பம் தான்!

நன்றே செய்வோம் இன்றே செய்வோம்
என்றே எழுவோம்
இன்றே நாம்!

=================================================கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக