செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

"உ.வெ.சா"





































with THANKS to tigerguru. blog.




"உ.வெ.சா"
=======================================================ருத்ரா

மூன்றெழுத்து மூன்றெழுத்து
என்று
"மூச்சு"க்கு முன்னூறு சொற்கள்
அடுக்கியிருக்கிறோம்.
முதல் மூச்சு மட்டும் அல்ல‌
அப்போதும் எப்போதும்
ஒரே மூச்சு
அதுவே "தமிழ்"...
ஆனால் அதன் அர்த்தம் மட்டும்
இதுவே தான்.
அது
"உ.வெ,சா"
பனையேடுகளில்
படுத்து
அந்த கரையான்களோடும்
கால வரையறையற்ற
யுத்தம் செய்து
கனக மணித்தமிழ் ஒலிக்க‌
கண் துஞ்சா பணி செய்து..தமிழ்
வரலாறு படைத்தவன்
உ.வெ.சா!
கல் பொரு சிறு நுரை..
அணிலாடு முன்றில்..
"முளிதயிர் பிசைந்த மென் காந்தள் விரல்"
நரி வெரூஉத் தலையார்
ஓரம் போகியார்
ஓதல் ஆந்தையார்
ஓல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
கடலாடு காதை
கானல் வரி
இப்படியெல்லாம்
ஏடுகள் ஒலிக்கின்ற ஓசைகளுக்கு
தன் மூச்சை பெய்து
உயிர் கொடுத்த
"உத்தமத்தமிழன்" இந்த‌
உத்தமதான புரத்து தமிழன்.
மேலே குறிப்பிட்ட சொற்கள்
எடுத்துக்காட்டுகள்.
அவரும் அவர் அடியொற்றியவர்களும்
அவர் முன் சென்றவர்களும்
தோண்டிய சுரங்கங்கள் தான் அவை.
இருப்பினும் அவன்
ஏடு தந்த தமிழின்
பீடு நடை இந்த தமிழுலகம் நன்கு அறியும்.

16.பாலை

உள்ளார்கொல்லோ-தோழி! கள்வர்
பொன் புனை பகழி செப்பம் கொண்மார்,
உகிர் நுதி புரட்டும் ஓசை போல,
செங் காற் பல்லி தன் துணை பயிரும்
அம் காற் கள்ளிஅம் காடு இறந்தோரே?

பாலை பாடிய பெருங்கடுக்கோ

17. குறிஞ்சி

மா என மடலும் ஊர்ப; பூ எனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப;
மறுகின் ஆர்க்கவும் படுப;
பிறிதும் ஆகுப-காமம் காழ்க்கொளினே.
பேரெயின் முறுவலார்
"செங் காற் பல்லி தன் துணை பயிரும்"
"குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப;"

தமிழ் மொழியின் தொன்மை அழகு
அதனுள் காதலின் இளஞ்சூடும் இனிமையும்
இழையும் நுண்ணழகு...
அம்மம்ம!
இந்த குறுந்தொகை வரிகளின்
மதிப்பு
கோடி கோடி...கோடிகள் இருக்குமா?
சீ அவையும் கழுதை தின்னும் காகிதமே!
தமிழ்ச்சொற்களின் இக்கட்டிக்கரும்பின்
அமுதச்சாறு
பிழிந்து தந்தவன் உ.வே.சா..

சமஸ்கிருதம் படித்தாலும்
அதற்குள் பைந்தமிழின் "கலித்தொகை வரிகளின்
கூடுகள் கட்டி குடியிருப்பான்!

தமிழ் மறவர்களே சிங்கங்களே
எந்த சிகரமுமே அருகே வெறும் கூழாங்கல்
ஆகிவிடுகிற‌
உயரம் கண்டவன் "உ.வே.சா"
அதோ அவன் தலைப்பாகையின் கம்பீரம் பாருங்கள்.
அது
அன்னைத்தமிழ்
அவனுக்கு சூடிய‌
மணி முடி!
"மணி முடிந்து" தன் பைக்குள் சுருட்டும்
இந்த கூச்சல்காடுகளில்
அமிழ்ந்து போகாதீர்கள் வீரத்தமிழர்களே!
இந்த தமிழ் ஒளி
உ.வெ.சா வின்
ஞாயிற்றொளியில் தமிழின்
ஞாலங்கள் படைப்பீர்.
வாழ்க நீடூழி நீடூழி
வாழ்க தமிழ்!
உ.வெ.சா வின் புகழ்.

==========================================================

1 கருத்து:

கருத்துரையிடுக