வியாழன், 16 பிப்ரவரி, 2017

சாலிட்டரி ரீப்பர் .....வில்லியம் வர்ட்ஸ்வர்த் (2 வது பாடல்)

சாலிட்டரி  ரீப்பர் .....வில்லியம் வர்ட்ஸ்வர்த்  
(2 வது பாடல்)
============================================


No Nightingale did ever chaunt

More welcome notes to weary bands

Of travellers in some shady haunt,

Among Arabian sands:

A voice so thrilling ne'er was heard

In spring-time from the Cuckoo-bird,

Breaking the silence of the seas

Among the farthest Hebrides.ஒரு நெய்தல் பாட்டு.
============================

அவள் பாட்டின் ஒலியை 

அந்த வானம்பாடிகளின் கீற்றுப்பிளவுகளான 

பூஞ்சிற்றலகுகளின்   இனிய தூறல்கள் கூட
  
இப்படி செபித்ததில்லை .

வெயில் வறுக்கும் அரேபிய பாலைவன 

மணல் நறு நறு ப்புகளில் 

கால் பதிய கடக்கும் பயணிகள் 

தங்கள் நிழல்களையே 

மர நிழல்களாய்  

ஒண்டிக்கிடக்கும்போது 

குளிர் பூங்குரலாய்  வரவேற்பது கூட 

அந்த தொலைதூர 

கதிர் அரிவாள் மங்கையின்

விடியல் பாட்டு தான்! 

வசந்த காலத்தை  குக்கூ  இசையாய் 

ஒலிபெயர்க்கும் குயில்கள் கூட 

இப்படியொரு சிலிர்ப்பூட்டும் 

உயிர்ப்பொலியை தந்ததில்லை.

அது 

அந்த ஸ்காட்லேண்டின் வடமேற்கு 

தீவுக்கூட்டங்களின்

தூரத்து மோனத்தை 

இப்படிக்   கடற் கூந்தலை 

கலைத்து விட்டுக்கொண்டு 

தலை வாரும் வேகத்தோடு கலைத்ததில்லை.

உற்றுக்கேளுங்கள் அவள் பாட்டை.

அது

சிதறிய தீவுகளுக்குள் 

அவள் கனவுச்சித்திலங்கள்  

ஊடி இழையும் 

ஒரு நெய்தல் பாட்டு ஆகும்!  

===========================================
மொழி மறு உயிர்ப்பு:
ருத்ரா இ பரமசிவன்.2 கருத்துகள்: