சனி, 18 பிப்ரவரி, 2017

மிக்சர் திங்கலாம் வாங்க!


மிக்சர் திங்கலாம் வாங்க!
======================================ருத்ரா

கூம்பு வடிவத்தில்
காகிதம் சுருட்டி
அதில் மிக்ஸர் நிரப்பி
கடைக்காரன் தந்ததை
தின்று கொண்டே
பார்ப்போம்.
முதலில் அதில் கிடக்கும்
ஓமப்பொடியை எடுத்துத்தின்போம்.
ஓ! இப்போது தான்
நம்பிக்கை வாக்கெடுப்பு
எடுக்கப்போகிறார்களாம்.
சரி! மிக்சரில் உள்ள‌
அவல் பொரிகடலையை
ஒன்னொண்ணாய் பொறுக்கித்தின்போம்.
அடடே! என்னவோ
ரகசிய வாக்கெடுப்போ எதுவோ
கேட்கிறார்களாமே!
அதெல்லாம் கிடையாது!
அந்த ஓட்டுகளை கைதிகள் போல்
கையிலிலும் காலிலும் சங்கிலி மாட்டி
வாயில் பிளாஸ்டர் வைத்து
இங்கு  வரிசையாக கூட்டி வந்திருப்பதே பெரிது!
சட்டு புட்டுன்னு
தலையை எண்ணி அனுப்பி விடறது ஒண்ணு தான்
இப்போ உள்ள மெயின் அஜெண்டா!
அதைவிட்டு
ரகசியம் அது இதுன்னு வச்சா
ஏம் பொழப்பு என்னாகிறது?
எனக்கு தான் எல்லாம் அதிகாரமும் இருக்கு!
பேசாமே போய் ஒக்காருங்க!
மிக்ஸர் பொட்லம் ரொம்ப ருசி!
அதில் உள்ள வேர்க்கடல பருப்பு
வறுக்கப்பட்டு மொறு மொறுன்னு
என்னா ருசி!
என்னவோ அமளியாம்.
மைக்கு உடஞ்சுதாம்.சட்டை கிளிஞ்சதாம்.
எதுத்து குரல் கொடுத்தவ‌ங்கள‌
வெளியேத்திட்டாங்க அடிச்சு மிதிச்சு!
மத்த பேரும் வெளியேறிட்டாங்க.
எதுத்து ஓட்டு போடணும்னு கொஞ்சம் பேரு தான்
மிச்சம்.
ஜனநாயக கைதிங்க எல்லாரும் சேந்து
அவர தேர்ந்தெடுத்திட்டாங்களாம்.
வெளியே பட்டாசு வெடி  கேக்குது.
ஸ்வீட்ஸ் வினியோகம் ....
கேக்காமலேயே வாய்க்குள் திணிக்காய்ங்க.
நமக்கு என்ன? அத பத்தி!
ராமன் ஆண்டா என்ன? ராவணன் ஆண்டா என்ன?
எத்தன நாளக்கித்தான் இதையே சொல்லிக்கிட்டு?
சீதை ஆண்டா என்ன? சூர்ப்பனக ஆண்டா என்ன?
மிச்சரும் தீந்து போச்சு!
பேப்பரை கசக்கி போட்டுட்டு
போய்கினே இருப்போம்!
அது என்ன பேப்பர்?
அதான் அடிக்கடி போடுற
நம்ம வாக்குச்சீட்டு.

===================================================

2 கருத்துகள்:

 1. பேப்பரை கசக்கி போட்டுட்டு
  போய்கினே இருப்போம்!

  பதிலளிநீக்கு
 2. அன்பு நண்பரே!

  அது பேப்பர் இல்லை.
  அவன் அடிக்கடி போட்ட‌
  வாக்குச்சீட்டு.

  பதிலளிநீக்கு