சனி, 4 பிப்ரவரி, 2017

அவசர அவசரமாய்...

அவசர அவசரமாய்...
=====================================ருத்ரா
குறும்பாக்கள்அவசரச் சட்டம்

அவசர அவசரமாய் வருவதற்கு
அவசியம் என்ன?..அந்த‌
காளையைத்தான் கேட்க வேண்டும்.

மெரீனா

இந்த ஆண்டு காதலர் தின‌
வாழ்த்து அட்டைகளுக்குள்
இதயம் திறந்தது "வாடி வாசலில்"

அலங்காநல்லூர்

வெளியேற்றமும்
வெளி நடப்பும் இல்லாத‌
சட்டசபை இது.

பீட்டா

பொமரேனியன் சங்கிலிகளோடு
நிறுத்திக்கொள்ளுங்கள்.
மூக்கணாங்கயிறுகள் எங்கள் மூச்சு.

ட்ரம்ப்

காரசாரமாய் வெள்ளைமாளிகையில்
தினமும் சூடாய் விற்கப்படுகிறது
மிளகாய் பஜ்ஜிகள்!


மோடி

காங்கிரஸ் எம்பி யின் மரணமே
பட்ஜெட் குருட்சேத்திரப்போரில்
ஒரு "அஸ்வத்தாமா யானை."

==============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக