வியாழன், 2 பிப்ரவரி, 2017

அர்த்தமே வேறு தான்.
அர்த்தமே வேறு தான்.
=================================ருத்ரா இ பரமசிவன்.

விண்மீன்களை
அந்த கடற்கரையில்
பதியம் போட்டது யார்?
அந்த கொம்புகளும்
அந்த காளைகளுமா?
தமிழ் எனும் உயிர்ப்பொறி
மாணவர்களின்
கைப்பொறிகளில்
அங்கு ஒளிக்கடல் ஆனது.
இருட்டுக்குள்
நிஜக்கடல் அங்கு
ஒளிந்து கொண்டது.
இந்த விடியல்களின் நாற்றுகளை
ஆறு ஏழு நாட்களாய்
அடைகாத்த சூரியனும்
அடையாளம் காட்டினான்
மொத்த இந்தியாவின்
கனவுகளின் கருவறை
இங்கு தான் என்று.
ஜல்லிக்கட்டு எனும்
தமிழர்களின் விழா
எப்படி இந்த
சாய்வு நாற்காலி அறிவு ஜீவிகளின்
தின் பண்டம் ஆனது.
அவர்கள் "பீட்சா"வை தின்பதற்கு
எங்கள் "கலித்தொகை"ப்பாடல்களா
பலியாவது?
தமிழர்களின்
"அகர முதல எழுத்தெல்லாம்..."
அந்த "அலங்காநல்லூரில்"தானே
அன்று எழுதப்பட்டது.
அகராதியில்
ஜல்லிக்கட்டு என்பதற்கு அர்த்தம்
எழுதினார்கள் புதிதாய் இன்று
"மெரீனா" என்று!

===================================================
புகைப்படம் ...நன்றி   : தினமலர் நாளிதழ்  19.01.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக