நாட்டு நடப்பு
=============================================ருத்ரா இ பரமசிவன்.
"என்னங்க! இன்னிக்கு என்ன செய்தி!"
"ஜல்லிக்கட்டு எல்லாம் டிவில காட்னாங்க.காளைக அந்த வீரர்கள
கொம்பால எகிற்ற காட்சி குலை நடுங்க வைக்குது.அப்றம் போயஸ் கார்டன்ல குரோட்டன்ஸ் தொட்டிங்க மாதிரி வரிசை வரிசையாக கைய கட்டி உக்காந்து மீட்டிங் போட்டாங்க.ஏக மனதா அம்மையார் சசிகலா அவர்களை தமிழ் நாடு சட்டமன்ற தலைவரா தற்போதய மாண்பு மிகு முதலமைச்சர் அவர்கள் முன்மொழிஞ்சாரு.அடுத்த முதலமைச்சர் அம்மையார்னு தீர்மானமாயிடுச்சு. அப்பால அம்மையார் ரெண்டு விரல் காட்டி கட்சி அலுவலக உப்பரிகையில் தோன்றினார்.அந்த அம்மா பாணியிலே"
"என்னண்ணே! பழைய செய்தியை எல்லாம் ரீல் சுத்திகிட்டு இருக்கீங்க!
இப்ப என்ன நியூசு.."
"ஓ! அத கேக்ரியா? உச்சநீதிமன்றம் ஒரு வாரத்துக்குள் "சொத்து குவிப்பு
வழக்கில்" தீர்ப்பு சொல்லிடுவாங்களாம்.அதனால தான் ஹெலிகாப்டர்ல
அப்புறம் விமானத்துல எல்லாம் பறந்து டெல்லி போன நம்ம ஆளுனர்
சென்னை வர்ரதை இப்போது ரத்து பண்ணி வச்சிருக்காரு"
"பதவியேஏற்பு விழாவெல்லாம் களையிழந்து கிடக்குது"
"அதிமுக தொண்டர்கள்ண்ற காளை இன்னும் ஜல்லிக்கட்டுக்குள்ள இறங்கலே!"
"அது எப்படி எறங்குவாங்க! அம்மையார் படம்போட்ட போஸ்டர கிழிச்சவரையே அவங்க கிழிச்சு அடிச்சு துவச்சுட்டாங்களே"
"ஆமா! அதுக்குள்ள "முக நூல்" "என்னப்பா விசேஷம்"(வாட்ஸ் அப்)ங்க்ற உலகத்துல ஒரே கொந்தளிப்பா இருக்காம்.மெரீனாக்கள் அங்கேயே அலை அடிக்குதாம்.அதுலேந்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சொன்ன கருத்துகள் இப்போ எல்லாரையும் கலக்கு கலக்குன்னு கலக்கிட்டிருக்கு அதுல ரெண்டு விஷயம் டாப் டக்கர்.ஒன்னு
"ஒரு ஒட்டுக்கு மூணு முதலாமைச்சரா?"ங்கறது.இன்னொண்ணு
அந்த "முதலை மாமரக்கதை"..
"அதக் கொஞ்சம் வெளக்குங்கண்ணே."
"இரு இரு..நானும் தலைப்பா கட்டிக்கிட்டு நீளக்கம்புல அருவாள சொருகிக்கிட்டு அண்ணன் பின்னால போணும்"
"ஓ! "சீமக்கருவேல வெட்டற பேரணியா?"
"பழய நினப்புல தூத்துக்குடி வரைக்கும்னு பாதயாத்ர கெள்ம்பிடாதீங்க.
அந்தப்பக்கம்லா போனா நீங்க அடுத்த தேர்தல் சமயத்துல தான் இங்கு
திரும்புவீங்க.அவ்வளவு சீமக்கருவேலுக்காடு தான் அந்த தெற்கு சீமை."
"அது சரி மறுபடியும் சீக்கிரம் தேர்தல் வரும்னு சொல்றாங்களே....ஆமா அப்படின்னா ..."
"ஆமா..எல்லாம் ஒரு முன் கூட்டிய கணிப்பு தான் இந்த சீமைக்கருவேலு
சமாச்சாரம்னு சொல்றீங்களா?"
"இருக்கலாம்"
"நல்லாதான் சொக்கட்டான் வெளயாடுராய்ய்ங்ங்க!"
"இரு ..இரு.. அதோ அந்த புரட்சி தலைவி அவர்களின் கல்லறையில்
ஏதோ பூகம்பமாம்.அவரது அந்த ஆத்மாவே அங்கு எழுந்து கொண்டதாம் !
டிவி காரர்கள் அங்கே மொய்த்துக்கொண்டார்கள் .மெரீனாவிலிருந்து இன்னொரு புரட்சியா? பார்க்கலாம், இந்த ஜல்லிக்கட்டு காளை இங்கேயுள்ள ஜனநாயகத்தின் முகம் மாறி அதில் ஒரு ஹிட்லரின் மூர்க்கம் உள்ளதை
களைந்து தூக்கியெறியுமா என்று பார்க்கலாம்?"
"காலத்தின் கட்டாயம் கண்ணுக்கு தெரியாமல் எழுதும் வரலாற்று வரிகள்
இனி ஆவேசமாய் அரங்கேறலாம்!"
"பார்ப்போம் "
===============================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக