வெள்ளி, 2 மார்ச், 2018

ஒரு விமர்சனம்.

ஒரு விமர்சனம்.
============================================ருத்ரா


"ருசி" என்று 28.02.2018 ஆனந்த விகடன் இதழில் வந்த கதையைப்பற்றிய ஒரு உள்முகப்பார்வை இது. திரு.ஷங்கர் பாபு அவர்கள் எழுதியது.
பெண் என்பவள் ஒரு மரப்பாச்சி அல்ல என்று சொல்ல வந்தவர் ஒரு
சீர் திருத்த "சினிமா" காட்ட வந்திருக்கிறார் என்று நினைத்து படிக்க ஆரம்பித்தால் மலையாள மாந்தரீக பாணியில் "அவளை" ஒரு குட்டிச்சாத்தான் பொம்மையாக்கி எதோ ஒரு அதர்வ வேத அச்சமூட்டல் மூலம் எழுத்துக்களை அதிரடியாய் இறக்கி யிருக்கிறார்.


ஷங்கர் பாபுவின் "ருசி" ஏதோ தொட்டுக்கொள்ள சுவையாய் இருக்கும்ருசி ஊறுகாய் பாட்டில் மாதிரி குறுநாவல் போல் இருக்கிறது என்று பார்த்தால் "ஊறுகாய் போடப்பட்டிருப்பது" "ஃப்ராய்டிஸ" எழுத்துக்கள் தான்.மனித வக்கிரங்கள் அத்தனை "அறிவு ஜீவித்தனங்களிலா" புதைக்கப்பட்டிருக்கும்? விட்டால் "போடா லூஸு நான் "குவாண்டம் பற்றி" ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை எழுதி அது நோபல் பரிசுக்கும்சிபாரிசு செய்யப்பட்டது தெரியுமா? நான் தான் இந்த கரப்பாம்பூச்சி உருவத்தை ஃபோட்டோவாய் போட்டு "பெண்" எனும் கொஞ்ச நஞ்சம் இருக்கும் என் சதைப்பிடிப்பை கொச்சைப்படுத்தி விடுவார்களேஎன்று வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்"என்று கூட அந்த மாலினி சொல்லியிருப்பாள் போலும்.ஒரு பெண்ணின் மன ஆழத்தில் இப்படி ஒரு வக்கிரத்தை புதைப்பதற்காகவே எழுத்தாளர் அந்த பெண் பாத்திரத்தை அப்படி ஒரு சிகரத்தில் ஏற்றியிருக்கிறார்.எனக்கு என்னவோ ஆணின் வக்கிரத்துக்கு ஒரு பெண்வேடம் ஏற்றி இப்படி எழுதியிருக்கிறார் என்றே தோன்றுகிறது.இது ஒரு "உளவியல் கதை" என்று ஒரு போர்வையை போர்த்திக்கொண்டால் போயிற்று.இப்படி ஒரு வக்கிரத்தை மையாய் ஊற்றி கதைகள் படைப்பதில்ஜெயமோகன் அவர்கள் முன்னே நிற்கிறார்.அவர் நிழலில் இந்தஷங்கர் பாபு.அவ்வளவு தான்.விறு விறுப்புக்கு என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று விளம்பர கார்ப்பரேட்டுகள்
டிவி களில் "சீரியல்களை" மிக மோசமான "க்ரிமினைலைசேஷன்"
யுத்திகளை "குடும்பக்கதைகளில்" கூட தூண்டில் புழுவாக்கி
வணிகம் செய்கிறார்களே அதைப்போன்றது தான் இதுவும்.

=========================================ருத்ரா இ பரமசிவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக