
புகைப்படம் :நன்றி மார்ச் 15. 2018 "ஒன் இந்தியா தமிழ்" இதழ்.
ஏதும் அறியோம் பராபரமே!
==========================================ருத்ரா
"வெள்ளை உடை உடுத்தி
இமயமலை வயிற்றுக்குள்
குடல்கள் வழிபோல
குறுகலாயும் நீண்டும்
குகை வழிப்போன
ஆன்மிகச் செல்வர் ரஜனி அவர்களே!
"சூப்பர் ஸ்டாரையும்
உங்கள் பெயரையும்" கூட
உதறித்தள்ளிவிடும் ஒரு
உன்னத இடம் தன்னில்
நின்றுகொண்டிருக்கிறீர்கள்.
வெள்ளைத்தாமரையாய் நிற்கும் நீஙகள்
அரசியல் பாத்திரம் ஏற்கும்
காவித்தாமரையாய் தான் மீண்டும்
குதிரை ஏறி வருவீர்களோ!
நாங்கள் ஏதும் அறியோம் பராபரமே !
1 கருத்து:
இவன் தன்னை பச்சைத்தமிழன் என்று முதல் பொய் சொல்லி அரசியல்வாதி ஆக்கி கொண்டானே...
கருத்துரையிடுக