காலா "டீஸர்"
============================================ருத்ரா
காலா என்றதும்
காவிரியை தமிழனுக்கு வளப்படுத்திய
கரிகாலன் எனும் பெருவளத்தான் என்ற
தமிழ்ச்சொல் நம்மை
மெய்சிலிர்க்க வைக்கிறது.
ஆனால் இது அரிதார உலகம்.
அசல் உலகத்தில்
இவர் "கன்னடத்துப்புலிகேசிகளுக்கு"
ஆதரவாய்
தன் மீசையை முறுக்குபவராக இருந்தால்
அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?
அம்பேத்கார் அவர்களின்
சமுதாய முழக்கம்
அவர் மனசாட்சியிலிருந்து
எரிமலை லாவாவாய் கொப்பளித்தது.
இவரது அரிதாரக்கடலிலிருந்தும்
நெருப்பு அலைகளுக்கு பஞ்சமில்லை.
ஆனால்
அசலான அடித்தட்டு வேர்வைக்கடலுக்கு
இவர் ஆதரவாய் அலைகள் எழுப்புபவரா?
சந்தேகம் தான்.
இவரது "கானல் நீர்"க்கடலில்
காவி நிறமே "சூர்ய நமஸ்காரம்" செய்கிறது.
கேட்டால் ஆன்மீக சுடர் கொழுந்து விட்டாலே போதும்
அரசியல் புடம் போடப்பட்டு விடும் என்பார்.
அதற்கு நாம் என்ன செய்யமுடியும்.
ஆன்மீகம்
சித்த வெளியில்
கற்பனைகளின் ஊற்று.
அரசியல் என்பது
மக்கள் அதிகாரத்தின்
சமுதாய ஊற்று.
ஆனால் இரண்டையும்
கலப்பது
ஆபாச சிந்தனைகளின் ஊற்று.
"ஆபாசம்"என்றால்
அசிங்கம் என்று முகம் சுளிக்க வேண்டாம்.
"முரண்பாடு" என்பதே
அதன் உண்மை அர்த்தம்.
ஒழுங்கான உடையுடன்
மனிதன் வெளிப்பட்டால்
அது நாகரிகம்.
உடையின்றி அவன்
வெளிப்பட்டால் அது
முரண்பாடு எனும் ஆபாசம்.
அரசியல் என்பது
அடித்தட்டு மனிதனின் கைக்குள்ளிருந்து
இந்த சமுதாயத்தை
ஆளும்அதிகாரமாய் பீறிடவேண்டும்.
ஆனால் அதற்கு
ஆத்மீக "சின்"முத்திரைகள் வெறும்
சின்னப்பிள்ளை விளையாட்டு.
இதை நாம் புரிந்து கொண்டோமா?
"கலிபிள் மாஸஸ் "என்பார்கள் ஆங்கிலத்தில் .
நுட்பம் புரியாத மேலோட்ட சிந்தனை
மக்களே இவர்கள் என்று அர்த்தம்.
இதோ பாருங்கள் !
பஞ்ச் டைலாக்....
பாஞ்சு பாஞ்சு போடும்
சண்டைக்காட்சிகள் ...
வெளிநாட்டு படப்பிடிப்புகளுடன்
கண்ணுக்கு அழகிய கதாநாயகியுடன்
குத்தாட்டங்கள்..
சமுதாயத்தை அப்படியே மாற்றிவிடுவதாய்
பாடல் வரிகள்..
அதற்கு ஏற்றவாறு
இசைக்கருவிகளின்
தாறு மாறு ஓசைக்கிழிப்புகள் ...
இப்படி அழகாய் செதுக்கப்பட்டிருக்கும்
நம் கல்லறையின் "மேல் மூடிகள் " ....
இந்த நுட்பம் புரியாதவர்களாய்
நாம் இங்கு கும்மாளம் போடுகிறோம் !
ஏனெனில் நாம் வெறும்
"கலிபிள் மாஸஸ் "(Gullible Masses)
"நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில் நலம்
மண்மாண் புனைபாவை அற்று."
வள்ளுவ வெளிச்சம் நமக்கு இன்னும்
எட்டவில்லையா?
===================================================
============================================ருத்ரா
காலா என்றதும்
காவிரியை தமிழனுக்கு வளப்படுத்திய
கரிகாலன் எனும் பெருவளத்தான் என்ற
தமிழ்ச்சொல் நம்மை
மெய்சிலிர்க்க வைக்கிறது.
ஆனால் இது அரிதார உலகம்.
அசல் உலகத்தில்
இவர் "கன்னடத்துப்புலிகேசிகளுக்கு"
ஆதரவாய்
தன் மீசையை முறுக்குபவராக இருந்தால்
அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?
அம்பேத்கார் அவர்களின்
சமுதாய முழக்கம்
அவர் மனசாட்சியிலிருந்து
எரிமலை லாவாவாய் கொப்பளித்தது.
இவரது அரிதாரக்கடலிலிருந்தும்
நெருப்பு அலைகளுக்கு பஞ்சமில்லை.
ஆனால்
அசலான அடித்தட்டு வேர்வைக்கடலுக்கு
இவர் ஆதரவாய் அலைகள் எழுப்புபவரா?
சந்தேகம் தான்.
இவரது "கானல் நீர்"க்கடலில்
காவி நிறமே "சூர்ய நமஸ்காரம்" செய்கிறது.
கேட்டால் ஆன்மீக சுடர் கொழுந்து விட்டாலே போதும்
அரசியல் புடம் போடப்பட்டு விடும் என்பார்.
அதற்கு நாம் என்ன செய்யமுடியும்.
ஆன்மீகம்
சித்த வெளியில்
கற்பனைகளின் ஊற்று.
அரசியல் என்பது
மக்கள் அதிகாரத்தின்
சமுதாய ஊற்று.
ஆனால் இரண்டையும்
கலப்பது
ஆபாச சிந்தனைகளின் ஊற்று.
"ஆபாசம்"என்றால்
அசிங்கம் என்று முகம் சுளிக்க வேண்டாம்.
"முரண்பாடு" என்பதே
அதன் உண்மை அர்த்தம்.
ஒழுங்கான உடையுடன்
மனிதன் வெளிப்பட்டால்
அது நாகரிகம்.
உடையின்றி அவன்
வெளிப்பட்டால் அது
முரண்பாடு எனும் ஆபாசம்.
அரசியல் என்பது
அடித்தட்டு மனிதனின் கைக்குள்ளிருந்து
இந்த சமுதாயத்தை
ஆளும்அதிகாரமாய் பீறிடவேண்டும்.
ஆனால் அதற்கு
ஆத்மீக "சின்"முத்திரைகள் வெறும்
சின்னப்பிள்ளை விளையாட்டு.
இதை நாம் புரிந்து கொண்டோமா?
"கலிபிள் மாஸஸ் "என்பார்கள் ஆங்கிலத்தில் .
நுட்பம் புரியாத மேலோட்ட சிந்தனை
மக்களே இவர்கள் என்று அர்த்தம்.
இதோ பாருங்கள் !
பஞ்ச் டைலாக்....
பாஞ்சு பாஞ்சு போடும்
சண்டைக்காட்சிகள் ...
வெளிநாட்டு படப்பிடிப்புகளுடன்
கண்ணுக்கு அழகிய கதாநாயகியுடன்
குத்தாட்டங்கள்..
சமுதாயத்தை அப்படியே மாற்றிவிடுவதாய்
பாடல் வரிகள்..
அதற்கு ஏற்றவாறு
இசைக்கருவிகளின்
தாறு மாறு ஓசைக்கிழிப்புகள் ...
இப்படி அழகாய் செதுக்கப்பட்டிருக்கும்
நம் கல்லறையின் "மேல் மூடிகள் " ....
இந்த நுட்பம் புரியாதவர்களாய்
நாம் இங்கு கும்மாளம் போடுகிறோம் !
ஏனெனில் நாம் வெறும்
"கலிபிள் மாஸஸ் "(Gullible Masses)
"நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில் நலம்
மண்மாண் புனைபாவை அற்று."
வள்ளுவ வெளிச்சம் நமக்கு இன்னும்
எட்டவில்லையா?
===================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக