இதோ வருகிறேன் உன்னிடம்.
=====================================================
ருத்ரா
கலிஃ போர்னியாவின் அடையாளமான
சீமைப் பனைமரமே !
உன்னை
ஒரு ஆலயமாக்கி
தினமும் வலம் வருவேன்
ஒரு
நடைப்பயிற்சிக்காக!
உன் பச்சை விசிறித் தொகையில்
நானும் வாசித்தேன் ஒரு கலித்தொகை.
புள் ஆகவா ?
புல் ஆகவா?
எதுவாய் நான் ஆகவேண்டும் ?
சொல் சொல் என் தலைவா?
வெள்ளி நீல விண் உதடுகள்
மின்னல் பிளவில்
என் உயிர் கவ்வும் முன்
சொல் தலைவா?
வரி வரியாய் அந்த ஓலைக்கீற்றுகளின்
வாள் நிழல்கள்
என் தனிமையை வெட்டி வெட்டித்தின்னும் முன்னே
சொல் தலைவா
அந்த சிட்டுக்குருவியாய்
உன் வானத்தின் கன்னம் வருடவருவேன்.
சொல் !
என் உயிர் தரையில் எல்லாம்
புல்லாய் பரவி
என் பச்சை நரம்புக்குள் கிடக்கும்
யாழினை மீட்டும் போது
உன் இதயம் குதிப்பதை நான்
பார்க்கிறேன்.
சொல் தலைவா!
இதோ வருகிறேன் உன்னிடம்.
=============================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக