================================================ருத்ரா
சக்கரநாற்காலியில் வசித்துக்கொண்டே
இந்த பிரபஞ்சத்தை உன் அறிவால்
வாசித்துக்கொண்டே இருந்த
சக்கரவர்த்தியல்லவா நீ.
இந்த விண்மீன் ஒருநாள் தன நிறையில்
எல்லையற்ற மடங்குகள் அதிகரிக்கும்போது
இந்த வெளியையே சுருட்டி மடக்கி
ஒரு புள்ளியாக்கி பிரபஞ்சத்தின்
ஒரு மயானத்துக்கு "குழி" வெட்டுகிறது.
இந்த கருந்துளை அல்லது கருங்குழிக்குள்
பிரபஞ்சத்தின் அதிகபட்ச வேகங்கள் கூட
உறிஞ்சப்பட்டு விடுகின்றன.
அதனால் ஒளியின் கதிர் அங்கு சுருண்டு கொள்கிறது.
காலத்தின் அம்பு அங்கே உருகி மறைகின்றது.
உன் கணக்கீடுகளால்
அதை வருடிக்கொண்டே இருந்தாய்.
அதை சூத்திரப்படுத்தினாய்.
பிறகு தான் அங்கு இருப்பது
கல்லறை இல்லை என்று உன் அறிவின் கூர்மை
ஒரு கோட்பாட்டை நட்டு வைத்தது.
அது தான் "வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி."
அந்த கருந்துளை ஒரு ஆற்றல் துகளின்
கதிர் வீச்சை வெளிப்படுத்துகிறது என்று
ஒரு சமன் பாடு உருவாக்கினாய்.
அது "ஹாக்கிங் ரேடியேஷன்" என்று
கொண்டாடப்படுகிறது.
1963 வாக்கில் மருத்துவர்கள் உனக்கு
ஆயுள் முடியப்போகிறது
என்று கை விரித்து விட்டார்கள்.
ஏ எல் எஸ் எனும் நரம்பு சிதைவு
அதாவது
அமையோட்ரோஃபிக் லேட்டரல் ஸ்க்ளோராசிஸ்
உன்னை வாரிக்கொண்டு போய்விடும்
என்கிறார்கள்.
உன் மூளையின் வலிமைக்கு முன்னே
அந்த காலன் தோற்றுவிட்டான்.
உனக்கு குரல் இல்லை.
கை கால் அசைவுகள் இல்லை.
ஆனால்
உன் முனைப்பான கணித நுட்பம்
உன் கன்னக் கதுப்புகளின்
மெல்லிய நரம்புகளை அசைத்தன.
அது உன் உறுப்பு ஆகிப்போன
கணினியை இயக்கி
குரலை ஒலித்தது.
திரையில் எழுதியது.
உலகப்புகழ் பெற்ற உன் சமன்பாடுகளை
உருவாக்கினாய்.
அது அந்த பிரபஞ்சத்தின்
விளிம்போர ஜன்னல்களை
எங்களுக்கு திறந்து காட்டியது.
இறக்கும்போது
அந்த நரம்புகள் எதை மீட்டியிருக்கும்?
சந்தேகமில்லாமல்
நம் பிரபஞ்சத்தின் இதயத்துடிப்பின்
இ.சி.ஜி.வரிகளைத்தான்.
உன் விஞ்ஞான வேட்டையும் வேட்கையுமே
24 வயதில் உனக்கு விழ வேண்டிய
முற்றுப்புள்ளியை
இந்த 76 வயது வரை அறிவின்
மின்னல் இழையாய் நீட்டித்து தந்தது.
எங்கள் பேராசைக்கோ அளவே இல்லை.
இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுக்கு
அது நீட்டிக்கப்பட்டால்
எப்படியிருக்கும்?
என்று கண்ணீர்த்துளிகளோடு
கற்பனை செய்துகொண்டே இருக்கிறோம்.
அந்த ஹிக்ஸ் போஸான் துகள் எனும்
மாய இழைவி
நம் பிரபஞ்சத்துக்கள்
ஒரு கள்ளத்தனமான "நிறையை"
நிரவி விட்டு விடலாம்.
அப்போது என்றாவது ஒருநாள்
(அது பில்லியன் பில்லியன் ..ஆண்டுகள் கூட
ஆகலாம்)
அது ப்ரோட்டான் நிறையை
146 மடங்குக்கு அதிகரிக்க செய்யலாம்.
அப்போது குவாண்டம் டன்னலிங் எனும்
நுண் அளவு இயக்கவியல் செய்யும் "துளைப்பால்"
இந்த பிரபஞ்சம்
ஒரு பிரம்ம்ம்ம்ம்மா ..ண்ட "குமிழி" யாய்
வீங்கி வடிக்கலாம்.
அதாவது அதற்கு 146 பில்லியன் எலக்ட்ரான் வோல்ட்
ஆற்றல் உள்ள அணு உலை வேண்டும்.
அஞ்சற்க என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இந்த உலகத்தின் சைசுக்கு
ஒரு அணு உலை ஏற்பட்டால் தான்
வாய்ப்பு உண்டு.
அந்த ஹிக்ஸ் போஸான் பற்றி
உன் எச்சரிக்கை எங்களை
உன் பக்கம்
சிந்திக்க வைத்துக்கொண்டே இருக்கும்
===================================================
Simulated data from the Large Hadron Collider particle detector shows the Higgs boson produced after two protons collide.
Credit: CERNமேலே கண்ட புகைப்படங்களுக்கும் கீழே உள்ள "லிங்கு"களுக்கும் என் நன்றி!
https://www.nytimes.com/2018/03/14/obituaries/stephen-hawking-dead.html
https://www.livescience.com/47737-stephen-hawking-higgs-boson-universe-doomsday.htm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக