வியாழன், 15 மார்ச், 2018

"அமமுக"

"அமமுக"
=====================================ருத்ரா

தமிழ் நாட்டு அரசியலில்
ஒரு ரம்மி விளையாட்டு இது.
"செட்" சேர
"செட்" கலைய‌
ஒரு சுவாரசியம் மிக்க‌
காட்சி இது.
மேலூர் எல்லாம் மக்கள் தலைகள்.
உற்சாகம் மிக்க தொண்டர்கள்.
அவர்கள் மீசைத்துடிப்புகளில்
புறநானூற்றுக் கொப்பளிப்புகள்.
பெயரில்
ஏன் திராவிடம் இல்லை?
ஏன் பெரியாரிசம் இல்லை?
டிவிக்கள் கணை தொடுத்தததில்
ஏதும் அர்த்தம் இல்லை.
"வில்" இல்லாமல்
தொடுத்த கணைகள் அவை.
ஆம்!.. நுட்ப அரசியல் சிந்தனை எனும்
வில் இல்லாமல் தொடுத்தவை அவை.
தமிழ் மண்ணில்
திராவிடம் எப்போதோ
உழுது உரமேறி விட்டது.
ஆத்திகத்தை நினைத்துக்கொண்டு
உலக்கையை குத்தினாலும்
அரிசியாய் வருவது திராவிடமே..
அதன் கண்ணுக்குத்தெரியாத‌
நாத்திகமே.
இந்த மக்கள் பாதயாத்திரை போவதும்
லட்ச லட்சமாய் இருமுடிகட்டி
ஜோதி பார்க்கப்போவதும் கூட‌
அந்த இல்லாத கடவுளைத்தேடித்தான்.
கடவுளை
அவர்கள் அறிவு
தரிசனம் செய்த அடுத்த கணமே
அவர்கள் கையில் இருப்பது
எல்லா எழுத்துகளும் அழிந்த "சிலேட்டு" தான்.
ஆத்மிக யாத்திரைக்குள்
நாத்திக தேடல் தான்
காலடிகள் பதிக்கின்றன.
இந்த தமிழ் மக்களின்
மனங்கள் வண்ணக்குழம்பின்
ஒரு கலைடோஸ் கோப்.
அதனால் பெரியாரும் திராவிடமும்
கிராமத்தின் தூசிகளில் புழுதிகளில் கூட‌
பதிந்து கிடக்கிறார்கள்.
காவியை "வர்ணமடித்தே" தீருவோம்
என்று
கச்சை கட்டுபவர்கள்
இங்கே ஏமாந்து தான் போவார்கள்.
இந்த‌
"அமமுக"வுக்குள்
வானிலை அறிவிப்பாளர்களால்
இன்னும் பெயர் வைக்கப்படாத‌
ஏதோ ஒரு புயல் சின்னம் தோன்றலாம்.
அது "எத்தனையாவது நம்பர்
எச்சரிக்கை கூண்டு" ஏற்றப்போகிறது
என்பதை
நெல்லிக்காய் மூட்டை அவிழ்ந்து சிதறும்
அந்த "ஓட்டுப்போடும்"
திருவிழாவில் தான் தெரியவரும்!
"காந்திப்புன்னகை" வலிமை மிக்கது.

==================================================








3 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

ஸூப்பர் நண்பரே அருமையாக சொன்னீர்கள்...

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

மிக்க நன்றி நண்பரே!

Justin Robers சொன்னது…

கிரிமினலின் மூஞ்சியை வைத்து, கிரிமினலின் பெயரைச் சூட்டி தொடங்கப்பட்ட கட்சி.
தொண்டர்களில் 80 விழுக்காட்டினர், குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள்தான். இதுவும் ஒரு ஜாதிக் கட்சி போலத்தான்.

கருத்துரையிடுக