புதன், 7 மார்ச், 2018

ரஜனியின் ரசாயனம்

சூப்பர்  ஸ்டார் "சூப்பர் மேன்" ஆகினார்
==================================================ருத்ரா

வேகமான பேச்சு!
ஆவேசமான பேச்சு !
இவற்றோடு
எம் ஜி ஆர்
கலைஞர்
ஜெயலலிதா
காமராஜர்
அவர்களுக்கு புகழாரங்கள்.
இவையெல்லாம்
கலந்து கொடுத்த காக்டெயில் பேச்சில்
ஒரு உக்கிரம் இருந்தது.
அந்த "வெற்றிடத்தை நிரப்பும்"
புயல் தலைவன் நான்!
எம்.ஜி.ஆரைப்போல் நல்லாட்சி
நான் தருவேன்.
என் "ராகவேந்திரா மண்டபத்தை"
நிமிர்த்திவைக்க‌
தூணாக இருந்தவர் எம்.ஜி.ஆர்.
என் திருமணத்தை
நடத்திவைப்பதில்
தாலி எடுத்து தந்தவர் போல்
ஒய்.ஜி.பி குடும்பத்தாரிடம்
அந்த மாய மந்திர சிபாரிசை அளித்து
கெட்டிமேளம் ஒலிக்கச்செய்தவர் எம்.ஜி.ஆர்.
கேட்போர் உள்ளம் விதிர் விதிர்க்க‌
அரியதோர் பேச்சால்
அதிரச்செய்தார் அந்த "சூபர்மேன்"
அழகாய்ச்சொன்னார்
பெண்பார்க்கப்போகின்றவனிடம்
திருமண அழைப்பிதழ் கேட்பது போல்
என் "அரசியல் கொள்கை" பற்றி
கேட்கின்றார்களே!
ஆனால் எப்போதோ ஒரு படத்தில்
"வள்ளி வரப்போறா!"என்ற பாட்டில் கூட‌
இதோ ரஜனி ரெடி!
விரல் முத்திரை இடத்தயாராகுங்கள்
என்று
அவர் சிக்னல் காட்டியே
பல யுகங்கள் ஆகியிருக்கும் போலிருக்கிறதே!
அப்புறமும்
யோசித்து யோசித்து தான்
ஒவ்வொன்றாய் சொல்கிறார்.
அண்ணா ..பெரியார்
மற்றும் இந்திரா நேரு என்றெல்லாம்
பட்டியல் நீளவில்லை.
சின்னப்பிள்ளைகள் யோசித்து யோசித்து
செப்பு வைத்து விளையாடுமே
அது போல் தான்
தன் ரசிகர்களோடு செப்பு விளையாட்டு
விளையாடுகிறார்.
எம் ஜி ஆரின் அந்த குல்லாவும் கண்ணாடியும்
அவரது "பொம்மை செட்டில்"
இருக்கிறது போலும்.
சாதி மதமற்ற அறவழி அரசியலே
ஆன்மிக அரசியல் என்று
அவர் "படம் வரைந்து பாகம்" குறித்து விட்டார்.
அதாவது
மற்ற சாதிகள் அற்ற
மற்ற மதங்கள் அற்ற
என்று நாளைக்கு அவர்கள்
தங்கள் "மதசார்பின்மையை"
(மற்றவர்கள் சொல்லும்
போலி  மதச்சார்பின்மையையெல்லாம்)
விரட்டி யடித்து விட்டு)
இவர் மீது பச்சை குத்த வரலாம்.
ரஜனி அவர்களே
எச்சரிக்கையாய் இருங்கள்!
எல்லாம் ஆண்டவன் செயல்
ஆண்டவன் சொல்றான்
இந்த அருணாசலம் கேக்றான்
என்று "பஞ்ச்சுக்கு" தாவி விடாதீர்கள்.
அவர்களிடம் ராமா ராமா என்றொரு
ரசாயனம் இருக்கிறது.
உங்களுக்கு
உங்கள் "ரஜனி ரசாயனம்" இருக்கிறது.
நீங்களே  சொல்லியிருக்கிறீர்கள்
தமிழன் ஒரு உலகத்தமிழனாய்
உயர்ந்து நிற்பான் என்று!
எங்களுக்கு அந்த
ரஜனி ரசாயனமே போதும்.
அந்த திரையை கிழித்து விட்டு
மக்களின் இந்த பொன் தரையில்
கம்பீர நடை பயில
சிக்கிரமே வாருங்கள்!

=================================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக