வேங்கையின் மைந்தன் (காலா டீசர் -2)
===============================================ருத்ரா
யார் அந்த வேங்கையின் மைந்தன்?
ஐயமில்லை!
நம் சூப்பர் ஸ்டார் தான்.
ஆன்மீக அரசியல் என்று
ஏன் பயப்படுகிறீர்கள்?
சமணர் பிடியில் இருண்டகாலமாய்
இருந்த
தமிழ் நாட்டில்
தேவாரமும் பன்னிரெண்டு
திருமுறைகளும் தப்பி வந்தனவே!
தமிழ் எப்படியும் இனிக்கும்.
அவர்களுக்கு வேண்டிய இனிப்பில்
அவர்கள் "லட்டு" செய்து கொள்ளட்டும்.
ஆத்திக தமிழை
சமஸ்கிருத சமையலில்
ருசியாக சாப்பிடுபவர்கள் தமிழர்கள்.
சிவனை "திராவிடன்" என்று குறிப்பிடும்
சமஸ்கிருத "அகராதிகளும்" உண்டு.
ருத்ரன் என்று வேதங்கள்
பரிவட்டம் கட்டும் தெய்வமே சிவன் தான்.
"தென்னாடுடைய சிவனே போற்றி!
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!"
என்பதும்
சிந்துவெளி முத்திரைகளிலும் ஒலிக்கும்.
அந்த சிந்து வெளி
இந்தியாவின் கடற்கரைகளில்
சேரிகளாக ஒதுங்கியிருக்கலாம்.
ஆம்.நெய்தல் தமிழே
நம் இந்திய நாகரிகத்தை முதலில்
நெசவு செய்தது.
இந்த "பரதவர்களே"
இந்தியாவின் பரத குலத்திற்கு
விதை தூவியவர்கள்.
பரதவன் ...வியாழன் எனும் வியாசனே
சமஸ்கிருதத்தை
வேதங்களாய் தொகுத்தவன்.
அந்த சூதாட்ட பங்காளிச்சண்டையை
மகா பாரதம் ஆக்கியவன்.
தமிழன் உருவாக்கிய சமஸ்கிருதமே
அவன் கையிலும் "பகடைக்கட்டையாக"
இருந்தது.
தமிழன் உருவாக்கிய சமஸ்கிருதத்தில்
உருகிப்போன..
அதை உயர்வாகக் கருதிய
தமிழனே "ஆர்யன்".
ஆர் என்ற சிறப்புத்தமிழ்ச்சொல்
எல்லா ஒலிப்புகளிலும்
இழைந்தது.
இந்த ஆர்யனே அந்த திராவிடனை
தள்ளி வைத்திருப்பானோ?
தமிழனுக்கு தமிழன்
சிண்டுகளைப்பிய்த்துக்கொள்வதிலும்
சிறப்பானவன் தமிழனே.
"மூவேந்தன்" சண்டைக்கு முன்னரேயே
இந்த இரு வேந்தன் சண்டைகள்
(திரையன் (இதுவே திராவிடன்) +ஆர்யன் சண்டைகள் )
மூண்டிருக்குமோ?
திரை எனும் தூய தமிழ்ச்சொல்லே
திராவிடச்சொல்லின் வேர்.
கடல் அலைகளில் கடந்து சென்று
உலகத்தின் பல பகுதிகளில் உள்ள
ஒலிப்புகளை "திரைவியமாக"
கொணர்ந்தவன் தமிழன்.
அதுவே சமஸ்கிருதம்.
சமம்..சமை எனும் சொல்லும்
கை.. கரம் எனும் சொல்லும்
இணைந்த கூட்டு ஒலிப்பே சமஸ்கிருதம்.
தொன்மைக்காலத்தில்
கரத்தால் செய்தவைவே "செய்யுள்" ஆயிற்று.
வேதம் தொட்டு எல்லா இலக்கியங்களிலும்
தமிழன் தொட்டு "செய்யுள்"ஆக்கிய
தமிழின் ஒலி வடிவங்களை
நிறைய அள்ளலாம்.
கொள்ளிடம் என்ற அழகான சொல்
"கொல்ரூன்"ஆகியிருப்பது
ரொம்பப்பேருக்கு தெரியாது.
அது ஆங்கிலம் சூட்டிய பெயர் என்று
இன்னும் சில அறிவு ஜீவிகள்
எண்ணி கிளுகிளுப்பு
அடைந்து கொண்டிருப்பார்கள்.
அது போல் தான்
சமஸ்கிருதம் "டமிலுக்கு "
"ரூட் லேங்குவேஜ்" என்று
கல்லூரிகளில் லெக்சர்
கொடுத்துக்கொண்டிருப்பார்கள்.
வாழ்க அந்த நாகசாமிகள்!
என் தமிழை நான் உயர்த்த
எனக்கு ஏதும் வெட்கமில்லை...
ஏன் "ராஜ ராஜ சோழனுக்கு"
வடக்கத்தியவர்களே
நினைவாலயம்
அமைக்கப்போகிறார்களாமே!
மோடிஜி இங்கு வந்து
தமிழ் உலகத்திலேயே
தொன்மையான மொழி என்று
சொல்லிவிட்டால் போதும்.
வாக்கு வங்கி அப்படியே அங்கு
சரிந்து விடும்.
"உயிரினும் மேலான போர் முரசு கட்டிலில்
அயர்ந்து படுத்து தூங்கியது
ஒரு தமிழ் (மோசி கீரன்) என்று
தெரிந்ததும்
தலையை கொய்யப்போன கை
"கவரி" வீசியதே !
"கித்னா சுந்தர் ஹை ஆப் கா தமிள் "
என்று கேட்டாலே போதும்
புல்லரித்து விடுவானே தமிழன் !
அதனால்
இந்த சிவாஜி ராவ் கெய்க்வாட் மட்டும் அல்ல
அந்த அமிதா பச்சனுக்கும்
இங்கே
கேட் அவுட்டுகளும் பால்குடங்களும் ரெடி.
எல்லாம் போகட்டும்!
நெட்டைப்பகலின் இந்த நெடுங்கனவு
ஆராய்ச்சியை இத்துடன்
துடைத்து அழித்து விடுங்கள்..
காலா டீஸரில் அந்த மேஜையில்
இருந்த "இராவண காவியம்"...
இன்னும் இந்த
"வேங்கை கா பேட்டா.."
போன்ற சொற்கூட்டம்
எல்லாம் சேர்ந்து
இந்த "திராரியன்" (திராவிடன் + ஆர்யன்)
பற்றிய கனவாய்
இங்கே நீண்டது.
=====================================================
===============================================ருத்ரா
யார் அந்த வேங்கையின் மைந்தன்?
ஐயமில்லை!
நம் சூப்பர் ஸ்டார் தான்.
ஆன்மீக அரசியல் என்று
ஏன் பயப்படுகிறீர்கள்?
சமணர் பிடியில் இருண்டகாலமாய்
இருந்த
தமிழ் நாட்டில்
தேவாரமும் பன்னிரெண்டு
திருமுறைகளும் தப்பி வந்தனவே!
தமிழ் எப்படியும் இனிக்கும்.
அவர்களுக்கு வேண்டிய இனிப்பில்
அவர்கள் "லட்டு" செய்து கொள்ளட்டும்.
ஆத்திக தமிழை
சமஸ்கிருத சமையலில்
ருசியாக சாப்பிடுபவர்கள் தமிழர்கள்.
சிவனை "திராவிடன்" என்று குறிப்பிடும்
சமஸ்கிருத "அகராதிகளும்" உண்டு.
ருத்ரன் என்று வேதங்கள்
பரிவட்டம் கட்டும் தெய்வமே சிவன் தான்.
"தென்னாடுடைய சிவனே போற்றி!
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!"
என்பதும்
சிந்துவெளி முத்திரைகளிலும் ஒலிக்கும்.
அந்த சிந்து வெளி
இந்தியாவின் கடற்கரைகளில்
சேரிகளாக ஒதுங்கியிருக்கலாம்.
ஆம்.நெய்தல் தமிழே
நம் இந்திய நாகரிகத்தை முதலில்
நெசவு செய்தது.
இந்த "பரதவர்களே"
இந்தியாவின் பரத குலத்திற்கு
விதை தூவியவர்கள்.
பரதவன் ...வியாழன் எனும் வியாசனே
சமஸ்கிருதத்தை
வேதங்களாய் தொகுத்தவன்.
அந்த சூதாட்ட பங்காளிச்சண்டையை
மகா பாரதம் ஆக்கியவன்.
தமிழன் உருவாக்கிய சமஸ்கிருதமே
அவன் கையிலும் "பகடைக்கட்டையாக"
இருந்தது.
தமிழன் உருவாக்கிய சமஸ்கிருதத்தில்
உருகிப்போன..
அதை உயர்வாகக் கருதிய
தமிழனே "ஆர்யன்".
ஆர் என்ற சிறப்புத்தமிழ்ச்சொல்
எல்லா ஒலிப்புகளிலும்
இழைந்தது.
இந்த ஆர்யனே அந்த திராவிடனை
தள்ளி வைத்திருப்பானோ?
தமிழனுக்கு தமிழன்
சிண்டுகளைப்பிய்த்துக்கொள்வதிலும்
சிறப்பானவன் தமிழனே.
"மூவேந்தன்" சண்டைக்கு முன்னரேயே
இந்த இரு வேந்தன் சண்டைகள்
(திரையன் (இதுவே திராவிடன்) +ஆர்யன் சண்டைகள் )
மூண்டிருக்குமோ?
திரை எனும் தூய தமிழ்ச்சொல்லே
திராவிடச்சொல்லின் வேர்.
கடல் அலைகளில் கடந்து சென்று
உலகத்தின் பல பகுதிகளில் உள்ள
ஒலிப்புகளை "திரைவியமாக"
கொணர்ந்தவன் தமிழன்.
அதுவே சமஸ்கிருதம்.
சமம்..சமை எனும் சொல்லும்
கை.. கரம் எனும் சொல்லும்
இணைந்த கூட்டு ஒலிப்பே சமஸ்கிருதம்.
தொன்மைக்காலத்தில்
கரத்தால் செய்தவைவே "செய்யுள்" ஆயிற்று.
வேதம் தொட்டு எல்லா இலக்கியங்களிலும்
தமிழன் தொட்டு "செய்யுள்"ஆக்கிய
தமிழின் ஒலி வடிவங்களை
நிறைய அள்ளலாம்.
கொள்ளிடம் என்ற அழகான சொல்
"கொல்ரூன்"ஆகியிருப்பது
ரொம்பப்பேருக்கு தெரியாது.
அது ஆங்கிலம் சூட்டிய பெயர் என்று
இன்னும் சில அறிவு ஜீவிகள்
எண்ணி கிளுகிளுப்பு
அடைந்து கொண்டிருப்பார்கள்.
அது போல் தான்
சமஸ்கிருதம் "டமிலுக்கு "
"ரூட் லேங்குவேஜ்" என்று
கல்லூரிகளில் லெக்சர்
கொடுத்துக்கொண்டிருப்பார்கள்.
வாழ்க அந்த நாகசாமிகள்!
என் தமிழை நான் உயர்த்த
எனக்கு ஏதும் வெட்கமில்லை...
ஏன் "ராஜ ராஜ சோழனுக்கு"
வடக்கத்தியவர்களே
நினைவாலயம்
அமைக்கப்போகிறார்களாமே!
மோடிஜி இங்கு வந்து
தமிழ் உலகத்திலேயே
தொன்மையான மொழி என்று
சொல்லிவிட்டால் போதும்.
வாக்கு வங்கி அப்படியே அங்கு
சரிந்து விடும்.
"உயிரினும் மேலான போர் முரசு கட்டிலில்
அயர்ந்து படுத்து தூங்கியது
ஒரு தமிழ் (மோசி கீரன்) என்று
தெரிந்ததும்
தலையை கொய்யப்போன கை
"கவரி" வீசியதே !
"கித்னா சுந்தர் ஹை ஆப் கா தமிள் "
என்று கேட்டாலே போதும்
புல்லரித்து விடுவானே தமிழன் !
அதனால்
இந்த சிவாஜி ராவ் கெய்க்வாட் மட்டும் அல்ல
அந்த அமிதா பச்சனுக்கும்
இங்கே
கேட் அவுட்டுகளும் பால்குடங்களும் ரெடி.
எல்லாம் போகட்டும்!
நெட்டைப்பகலின் இந்த நெடுங்கனவு
ஆராய்ச்சியை இத்துடன்
துடைத்து அழித்து விடுங்கள்..
காலா டீஸரில் அந்த மேஜையில்
இருந்த "இராவண காவியம்"...
இன்னும் இந்த
"வேங்கை கா பேட்டா.."
போன்ற சொற்கூட்டம்
எல்லாம் சேர்ந்து
இந்த "திராரியன்" (திராவிடன் + ஆர்யன்)
பற்றிய கனவாய்
இங்கே நீண்டது.
=====================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக