செவ்வாய், 19 நவம்பர், 2019

"அதிசயப்பிறவி" ரஜனி

"அதிசயப்பிறவி" ரஜனி
============================================ருத்ரா

அதிசயப்பிறவி என்ற படத்தில்
ரஜனியின் நடிப்பு
ஒரு அதிசயம்.
அவர் நகைச்சுவையில் ஒரு
அதிசயப்பாணியைக் காட்டி
அசத்தியிருப்பார்.
அதிலும் அந்த எமதர்ம ராஜாவாக வரும்
வினு சக்கரவர்த்தியிடம்
"பேஜா..ர்ரா ப்போச்ச்சு"என்று
நீட்டி முழக்குவார்.
சிரிப்பில் தியேட்டரே கலகலக்கும்.
அது போல் தான்
அதிசயம்..அற்புதம்
என்று
எடப்பாடி அவர்கள்
அரசு நாற்காலியில் உட்கார்ந்ததும்
அந்த நாற்காலியில் ஒட்ட்ட்ட்டிக்கொண்டு
உட்கார்ந்து இருப்பதும்
உலகத்தின் எட்டாவது அதிசயம் என்று
கலாய்த்திருக்கிறார்.
தானும் இப்படி அதிசயங்கள்
நிகழ்த்தலாம் என்று ஒரு குறிப்பு
காட்டுகிறாரோ?
இந்த இரண்டு பேருக்கும்
"காட் ஃபாதர்" ஒருவர் தான்
என்று
அவர் அறிந்து பேசுகிறாரா?
அறியாமல் பேசுகிறாரா?
என்பதும் அவர் அறியார்!
எனவே அவர் மொழியில்
அது இன்னும் "பேஜா...ர்ராக"த்தான்
இருக்கும் எனத் தெரிகிறது.
அது சரி!
அவர் கால் இன்னும்
தமிழ் மண்ணில்
தமிழ் மொழியில்
தமிழர் உணர்வுகளில்
பதியம் ஆகவில்லையே.
இந்த ஒட்டுச்செடியில்
இயற்கை ரோஜாக்கள் பூக்குமா?
இல்லை
காகித ரோஜாக்கள் தான் பூக்குமா?
என்று தெரியவில்லை.
ஆனால்
"காவி"ரோஜாக்களை
பூக்க விடாமல் செய்யும்
ஒரு காவியத்தலைவனாகத்தான்
வலம் வருவேன்
என்று டயலாக்கை வைரல் ஆக்கும்
உரை வீச்சு நிகழ்த்தியிருக்கிறார்.
இவரிடம் உள்ள ஆன்மீகத்தை வைத்துக்கொண்டு
அர்ஜுனன் சம்பத்துகள்
நாளை நம் அய்யன் வள்ளுவன் சிலையை
"வால்மீகி" சிலை என்று
கர்ஜனைகளை முன் வைத்தாலும் வைக்கலாம்.
அப்போது அவருக்கே உரிய‌
பஞ்ச் டயலாக் பேசலாம் இப்படி.
நாம் வள்ளுவரையும் பார்த்ததில்லை.
வால்மீகியையும் பார்த்ததில்லை.
சிலை தானே.
பார்ப்பவர்கள்
அவர்களுக்கு வேண்டியவர்களை
பார்த்துவிட்டுப் போகட்டுமே.
இப்படி பேசும் அதிசயங்களும்
நாளை நிகழலாம்
அல்லது
நிகழாமலும் போகலாம்.
அதிசயப்பிறவியான இவர்
எம்ஜியார் போல்
தனிப்பிறவி ஆகும் ஒரு
அதிசயப்பிறவியாய்
பரிணாமம் அடைவதற்கு
தயார் ஆகிக்கொண்டிருக்கிறாரா?
21ல் தேர்தல் எந்திரத்தின்
"3.0" எந்திரன் ஆவாரா?
பார்ப்போம்!

===============================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக