Malibu Temple.Los Angeles.
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி...
================================================
ருத்ரா இ பரமசிவன்.
பக்தர்களின்
வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்கு
இருப்பவரே
கடவுள் என்றால்
வேண்டுதல் வேண்டாமை இலான்
என்பவர் யார்?
பக்தர்களின் வேண்டுதல்களை கொடுக்க
அவர்
தன்னிடம்
வேண்டுதல்களை குவியல் குவியலாக அல்லவா
வைத்திருக்க வேண்டும்.
அல்லது
"வேண்டாமை"யின் வடிவம் அவர் என்றால்
அவருக்கு பக்தர்களும் வேண்டாம்.
கடவுள் என்ற பட்டமும் வேண்டாம்
அப்புறம்
"வேண்டுதல் வேண்டாமை இலான்"
என்ற
அடைமொழி இல்லாது போய்விடுமே.
வேண்டாமை உள்ளவர்களுக்கு
கடவுளும் வேண்டாம்.
கடவுளுக்கு
வேண்டாமை உள்ளவர்களும்
வேண்டாம்.
வேண்டுதல் வேண்டாமை இல்லாத
தூய துறவறம் என்பதே
நாத்திகம்
என்று
கடவுளுக்கு தெரியும்.
கண்ணை மூடிக்கொண்டு கற்பனையாய்
நிறுத்தியிருக்கும்
அந்த கடவுள் வேண்டும்
என்று
அடம் பிடிப்பவனும்
துறவி ஆகமாட்டான்.
பற்றுக
பற்றற்றதை.
பற்று விடற்கு
அதுவே
பற்று .
வேண்டுதல்களை மூட்டை மூட்டையாய்
என் முன் குவிக்காதே.
வேண்டாமையே என் வேண்டுதல்
என்று
எவன் என் முன் நிற்கிறானோ
அவனே
என் முன் நிற்கலாம்
என்று
கடவுள் ஒருநாள்
தன் முன்
ஒரு "போர்டு" வைக்கிறார்.
அதன் பின்
அங்கே யாருமே இல்லை
நாத்திகனைத்தவிர!
================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக