வெள்ளி, 1 நவம்பர், 2019

ஹேப்பி ஹேல்லோவியன்!

ஹேப்பி ஹேல்லோவியன்!
================================================ருத்ரா

எலும்புக்கூடுகளே! எலும்புக்கூடுகளே!
அழகிய அழகிய எலும்புக்கூடுகளே!
பயம் காட்டவா? பயம் போக்கவா?
கலிஃபோர்னிய வீதிகளில்
வீடுகள் தோறும் "பூசணி"விளக்கில்
பேய்கள் சிரிக்கும்.
பேய்களோடும் மனிதன்
"பேஸ் பால்"விளையாட வேண்டும்
என்பதே அமெரிக்கர்களின்
அசுரத்தனமான ஆசை.
பிஞ்சுகளின் விளையாட்டுப்பொம்மைகளிலும்
அந்த கபாலங்கள் சிரித்துக்கொண்டே இருக்கும்.
அந்தியின் நீலச்சிவப்பில்
இந்த மழலைச்சிட்டுகள் சிறகடித்து
கூட்டம் கூட்டமாய் வருவது
ஒரு அழகு!
எப்படியாவது இந்த உலகில் 
ஓ அமெரிக்கனே!
நீ மட்டும் முந்திக்கொண்டு ஓடு!
உலகமனிதர்கள் 
போட்டி போட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.
வறுமையை வெல்வதும் கூட‌
ஒரு ஒலிம்பிக் விளையாட்டு
இவர்களுக்கு.
இவர்களுக்கு மிகவும் அச்சம் தருவது
இவர்களின் லாபவேட்டை விளையாட்டை
அந்த பொருளாதார ஆணிவேரை
எவரும் அசைத்துப்பார்த்திடக்கூடாது.
கட்டற்ற சுதந்திரம் என்ற கவசமே
அதைப் பாதுகாக்கும் 
என்பது 
இவர்களது சூத்திரம்.
தலைவிரிகோலமாய் ஒரு எலும்புக்கூடு
மின் சொட்டு விளக்குகளில்
கண் சிமிட்டுவதில்
ஒரு உட்குறிப்பை காட்டுகிறது.
"வேப்பமரத்து உச்சியில் நின்னு
பேயொண்னு ஆடுதுன்னு"
சொல்லுவாங்க.
அது வெறும் விளையாட்டு தானடா
என்று
"சின்னப்பயல்களுக்கு"
சேதி சொன்ன 
பட்டுக்கோட்டையின்
உறுதிப்பூக்களே இங்கு
புன்னகை பூக்கிறது.

=============================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக