சனி, 2 நவம்பர், 2019

கடவுளோடு ஒரு விளையாட்டு

கடவுளோடு ஒரு விளையாட்டு
=============================================ருத்ரா

நாமே ஏற்படுத்திக்கொண்ட கடவுள் என்பதால் நமது விருப்பு வெறுப்பு கோபம் பகை என்பதையும் கடவுளுக்கு உடுத்திப் பார்ப்பதும்  நமது ஏற்பாடு தான். வாழ்க்கையே மாயை என்னும் போது கடவுளும் ஒரு மாயையாகத்தான் நம்மிடம் இருக்கிறார். இந்த மாயைகளை களைவதற்கு மனிதனின் அறிவார்ந்த சிந்தனையே தேவை.

அஜாதம்
அவர்ணம்
அவ்யக்தம்
அவ்வியவஹார்யம்
அச்சிந்தயம்
அவித்யா
அபவுருஷம்
அமதம்
அனாதி
அனந்தம்
என்று இப்படி அடுக்கிக்கொண்டேபோனால்
அவேதம் (வேதம் அற்றது )
அப்பிரம்மம் (பிரம்மம் அற்றது)
என்னும்
நாத்திகம் தான்
மிஞ்சும்

.அப்புறம் ஏன் இந்த தேவம் அசுரம் எனும் பொம்மை விளையாட்டு? அடையாளங்களை களைந்த பின் எதற்கு இந்த ஆயுத அடையாளங்கள்? ஒரு உட்குறிப்பாய் ஒரு இனப்போரை காட்டுவதற்கே இது புராணமாய் எழுதப்படுகிறது. அதர்மத்தை வெல்லுவதற்குத் தான் அத்தனை ஆயுதங்களும் என்றால் தர்ம அதர்மத்தை தாண்டிய பிரம்மம் என்று சொல்வதெல்லாம் பொய் என்று ஆகிறது.மொத்தத்தில் கடவுள் என்பது மனிதன் விளையாடுவதற்கு அவனே செய்து கொண்ட பொம்மை ஆகும்.சில மனிதர்களிடையே இந்த பொம்மைக்கு கொம்பு முளைத்து கோர ரூபமாய் கோரைப்பல்லும் முளைத்துவிடுவதே பிரச்னை ஆகி  விடுகிறது.

மேலே சொன்னவாறு கடவுளைத்தேடும் "தத்துவ விச்சாரத்தில் " மூழ்கிவிட்டால்  அப்புறம் கடவுள் இல்லை என்று தான் எழுந்து நிற்போம். இந்த உண்மை  தெரிந்து விடக்கூடாது என்பதற்குத்தான் அந்த நான்கு வேதங்களும் கூட மறைத்து மறைத்து ஓதப்படுகிறது.அவை நான்கு "மறைகள் "எனப்படுவதும் இதனால் தான். கடவுள் எனும் இந்த கண்ணாமூச்சி விளையாட்டில் மனிதனை மனிதன்  வெறுக்கும்    ஒரு மனிதாபிமானமற்ற வெறி எப்படி நுழைந்தது?

அவர்ணம் என்று சுலோகம் சொல்லிக்கொண்டே "சதுர் வர்ணம்"புகுந்து கொண்டது. பிரம்மம் அபுருஷமானது என்று சுலோக இரைச்சல் கேட்டது தான் மிச்சம். புருஷ சூக்தம் என்று நான்கு வர்ண சனாதனம் அட்டை போல்
மக்களை உறிஞ்சிக்கொண்டிருப்பதைத்தான் நாம் பார்க்கிறோம்.மனிதர்கள் மரக்கட்டைகளாய் விறைத்துப்போனார்கள்.இதனால் தான் மதம் ஒரு அபினி என்றான் சமுதாய இயக்கவியலின் ஒரு மேதை.

===================================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக