கேள்வியும் நானே பதிலும் நானே
===========================================ருத்ரா
கடவுள்
உண்டா?இல்லையா?
இருந்தால்
ஆணா? பெண்ணா?
ஆண் என்றால்
சிவனா?விஷ்ணுவா?
பெண் என்றால்
பார்வதியா?லட்சுமியா?
அஃறிணை என்றால்
உயிருள்ளதா?
உயிரற்றதா?
உயிரற்றதென்றால்
அதுவா?
இதுவா?
கடவுளுக்கு
மதம் உண்டா? இல்லையா?
இருந்தால் எந்த மதம்?
இல்லாவிட்டால்
ஏன் இல்லை?
அவர்
நாத்திகரா? ஆத்திகரா?
நாத்திகர் என்றால்
திராவிட நாத்திகரா?
ஆரிய நாத்திகரா?
ஆத்திகர் என்றால்
நித்யானந்தா பக்தரா?
சங்கராச்சாரியார் பக்தரா?
அவர் கடவுள் இல்லை.
அவர் மனிதன் இல்லை.
அவர் உயிரும் இல்லை.
அவர் உயிரற்றதும் இல்லை.
அவர் அறிவா?
அறிவு என்றால்
கம்பியூட்டரா?"கை பேசி"யா?
அவர் அறியாமையா?
அறியாமை என்றால்
அவர் பன்றிக்காய்ச்சலா?
பறவைக்காய்ச்சலா?
அவருக்கு
நோவும் இல்லை
நொம்பலமும் இல்லை.
அவர்
ஜனனமும் இல்லை
மரணமும் இல்லை.
அவருக்கு பிறக்கத்தெரியாதா?
அவருக்கு பிறக்க இயலாதா?
பிறந்தால்
இறக்கத்தெரியாதா?
இறக்க இயலாதா?
பிறக்கத்தெரியாதவரையும்
இறக்க இயலாதவரையும்
பற்றி
பிறக்கின்றவர்களும்
இறக்கின்றவர்களும்
வாழ்த்துகளையும்
ஒப்பாரிகளையும்
கூடி கூடி குரலெழுப்பி
பட்டிமன்றம் நடத்தப்படுகிறதே.
பட்டிமன்றத்துக்கு
ஒரு பக்கமா? இரு பக்கமா?
......................
.........................
........................
அய்யோ சாமி..ஆளை விடு..
........................
........................
எங்கே ஓடுகிறீர்கள்.?
ஏன்?
உபனிஷத்..உபனிஷத்..
கேளுங்கள்.
அப்படியென்றால்
அருகில் உட்காருங்கள்..உட்காருங்கள்..
என்று அர்த்தம்..
இது தான் "கேள்விகளால் ஆன"
"ப்ர்ச்னோபனிஷத்"
கேள்விகளை
நீங்கள் கேட்கிறீர்களா?
நான் கேட்கட்டுமா?
.............
..............
அய்யய்யோ!
மீண்டும் முதல்லேருந்தா?
கேள்விகளை முதலில்
கேட்டவர் கடவுள்.
பதில்கள் சொன்னவரும்
கடவுள்.
இப்போது
பாம்பு தன் வாலையே
கவ்வி விழுங்கிக்கோன்டிருப்பது போல்
ஞானப்பயிற்சி எனும்
ஞானவேள்வி
நடந்துகொண்டிருக்கிறது.
வாருங்கள்.
உங்களுக்கு எது வேண்டும்?
ஞானப்பயிற்சியா?
ஞானவேள்வியா?
.........
..........
கேள்வியே வேண்டாம் சாமி.
நான்
"விடை" பெற்றுக்கொள்கிறேன்.
========================================================
===========================================ருத்ரா
கடவுள்
உண்டா?இல்லையா?
இருந்தால்
ஆணா? பெண்ணா?
ஆண் என்றால்
சிவனா?விஷ்ணுவா?
பெண் என்றால்
பார்வதியா?லட்சுமியா?
அஃறிணை என்றால்
உயிருள்ளதா?
உயிரற்றதா?
உயிரற்றதென்றால்
அதுவா?
இதுவா?
கடவுளுக்கு
மதம் உண்டா? இல்லையா?
இருந்தால் எந்த மதம்?
இல்லாவிட்டால்
ஏன் இல்லை?
அவர்
நாத்திகரா? ஆத்திகரா?
நாத்திகர் என்றால்
திராவிட நாத்திகரா?
ஆரிய நாத்திகரா?
ஆத்திகர் என்றால்
நித்யானந்தா பக்தரா?
சங்கராச்சாரியார் பக்தரா?
அவர் கடவுள் இல்லை.
அவர் மனிதன் இல்லை.
அவர் உயிரும் இல்லை.
அவர் உயிரற்றதும் இல்லை.
அவர் அறிவா?
அறிவு என்றால்
கம்பியூட்டரா?"கை பேசி"யா?
அவர் அறியாமையா?
அறியாமை என்றால்
அவர் பன்றிக்காய்ச்சலா?
பறவைக்காய்ச்சலா?
அவருக்கு
நோவும் இல்லை
நொம்பலமும் இல்லை.
அவர்
ஜனனமும் இல்லை
மரணமும் இல்லை.
அவருக்கு பிறக்கத்தெரியாதா?
அவருக்கு பிறக்க இயலாதா?
பிறந்தால்
இறக்கத்தெரியாதா?
இறக்க இயலாதா?
பிறக்கத்தெரியாதவரையும்
இறக்க இயலாதவரையும்
பற்றி
பிறக்கின்றவர்களும்
இறக்கின்றவர்களும்
வாழ்த்துகளையும்
ஒப்பாரிகளையும்
கூடி கூடி குரலெழுப்பி
பட்டிமன்றம் நடத்தப்படுகிறதே.
பட்டிமன்றத்துக்கு
ஒரு பக்கமா? இரு பக்கமா?
......................
.........................
........................
அய்யோ சாமி..ஆளை விடு..
........................
........................
எங்கே ஓடுகிறீர்கள்.?
ஏன்?
உபனிஷத்..உபனிஷத்..
கேளுங்கள்.
அப்படியென்றால்
அருகில் உட்காருங்கள்..உட்காருங்கள்..
என்று அர்த்தம்..
இது தான் "கேள்விகளால் ஆன"
"ப்ர்ச்னோபனிஷத்"
கேள்விகளை
நீங்கள் கேட்கிறீர்களா?
நான் கேட்கட்டுமா?
.............
..............
அய்யய்யோ!
மீண்டும் முதல்லேருந்தா?
கேள்விகளை முதலில்
கேட்டவர் கடவுள்.
பதில்கள் சொன்னவரும்
கடவுள்.
இப்போது
பாம்பு தன் வாலையே
கவ்வி விழுங்கிக்கோன்டிருப்பது போல்
ஞானப்பயிற்சி எனும்
ஞானவேள்வி
நடந்துகொண்டிருக்கிறது.
வாருங்கள்.
உங்களுக்கு எது வேண்டும்?
ஞானப்பயிற்சியா?
ஞானவேள்வியா?
.........
..........
கேள்வியே வேண்டாம் சாமி.
நான்
"விடை" பெற்றுக்கொள்கிறேன்.
========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக