வியாழன், 14 நவம்பர், 2019

கணிப்பொறியை வச்சு செஞ்ச...

கணிப்பொறியை வச்சு செஞ்ச...
=========================================ருத்ரா

ஜனநாயகம் என்பது
எண்ணிக்கையில்
எழுப்பப்படும் மாளிகை.
அந்த எண்ணிக்கையும்
ஒரு விளிம்பை
உடைத்துக்கொண்டு போகும்போது
"மிருகபலம்"என்று
மக்களால் அஞ்சப்படுவதுண்டு.
கணிப்பொறி
என்ற விஞ்ஞானப்பெருமிதத்தை
வச்சு செஞ்ச ஜனநாயகம்
ஜனநாயகமா?
சர்வாதிகாரமா?

சத்தமில்லாமல்
மசோதாக்களுக்கு  மேல்
மசோதாக்களாய்
ஆளுவோர் மடியில்
செல்ல பொமரேனியன்களாய்
கொஞ்சப்படலாம்.
அவை சட்டமாகும் போது
மக்கள் அதில் அச்சப்படலாம்.
என்னவோ அரசியல் அமைப்பு புத்தகமாமே.
முதலில் அட்டைகள் நன்றாயில்லை
என்று
கிழித்துப்போடப்படலாம்.
அப்புறம்
முகவுரைகளின்
முகங்கள்
கரி பூசப்படலாம்.
அதற்கு அப்புறம்
இத்தனை பக்கங்கள் ஷரத்துக்கள்
எல்லாம் எதற்கு
என்று அவையும் கிழித்தெறியப்படலாம்.
ஒரே நாடு.
ஒரே பக்கம் போதும்.
ஆனால்
அது யார் பக்கம்?

ஆமாம்..
அது தான் வாட்ச் டாக் எனும்
பாதுகாப்பு எந்திரங்கள்
இருக்குமே என்று
கேட்கிறீர்கள்.
அவையும் எல்லாமே
செல்ல பூனைக்குட்டிகளாய்
ஆள்வாரின் காலடியில்
தொண்டரடிப்பொடியாழ்வார்கள்
ஆகி விட்டால்....?
தேர்தலை நடத்தும்
மகா எந்திரமே
எந்திரி என்றால் எந்திரிக்கும்
உட்காரு என்றால் உட்கார்ந்து விடும்.
மன்னன் எவ்வழி
மக்கள் அவ்வழி
என்பது நேற்று.
மக்கள் எவ்வழி
மன்னன் அவ்வழி
என்பது இன்று.
ஆனால் அந்த
வரலாற்று மாற்றம்
என்பதும்
ஏமாற்றம் ஆகும் போது..
கணிப்பொறிக்கும் கூட
பொறி கழன்று போய்விடுமோ?
வழிகள் தவறின.

வழி தவறிய
ஜனநாயகம்
சர்வாதிகாரம்
எனப்படும்.

=======================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக