வெள்ளி, 1 நவம்பர், 2019

எல்லோரும் நல்லவரே!

எல்லோரும் நல்லவரே!
===================================================ருத்ரா

பிரம்மன்
பிடித்த மண்பொம்மைகள்
எல்லாம் நல்லவை தானே.
அவன் உயிரை அவற்றினுள்
ஊதி ஊதி தானே சமைத்திருக்கிறான்.
அப்புறம்
ஏன் இந்த அசுர வதங்கள்?
வெந்தும் வேகாமலும் இருக்கும்
பிரம்மனின்
அரைவேக்காட்டுத்தனத்தால் தான்
அவர்கள் அசுரன்கள் ஆனார்கள்
என்றால்
அவன் படைப்பில்
குவாலிடி கன்ட்ரோல் இல்லாமல்
போய்விட்டது என்று தானே அர்த்தம்.
பாவ புண்ணியங்களுக்கு
ஏற்றாற்போல் தான் அப்படி என்றால்
பாவபுண்ணியங்களையும் அந்த
பிரம்மன் தானே உருவாக்குகிறார்.

ஆனால்
மனிதர்கள் எல்லோரும் நல்லவரே!
அவர்கள்
தெய்வங்களின் கைகளில் உள்ள‌
ஆயுதங்களைப்பார்த்து தான்
வில்லன்கள் ஆகியிருக்க் முடியும்.
ராமனைவிட ராமனின் கையில்
இருக்கும் "கோதண்டமே(வில்)"
இங்கு தெய்வம் ஆனது.
சிவனின் சூலமே
போர் செய்யும் மனிதனை
வார்த்தது.
இப்போது புரிந்ததா?
"எல்லோரும் நல்லவரே"
இந்த தெய்வங்களைத் தவிர
என்று.

====================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக