ஞாயிறு, 17 நவம்பர், 2019

வெற்றிடம் பற்றி பேசும் ரஜனி


வெற்றிடம் பற்றி பேசும் ரஜனி
========================================ருத்ரா



தமிழ் நாடு வெற்றிடமாய் இருக்கிறது.
ஆண்டவன் சொல்லிட்டான்
அருணாசலம் கேட்டுட்டான் 
என்பது போல‌
பேசுகின்ற ரஜனி அவர்களே!
ஒரு ஆன்மீக அரசியல்வாதி 
இப்படி பேசுகின்றார் என்றால்
பளிச்சென்று தெரிகிறது
அவர் ஞானத்தில் வெற்றிடம் 
இருக்கிறது என்று.

அன்று 
சங்கரர் வரும்பாதையில்
எதிரே 
ஒரு தீண்டத்தகாதவர் வந்தபோது
கடவுளை தீட்டுப்படுத்தி விடாதே
விலகு விலகு 
என்றார்களாம்.
அவரும் அப்பாவியாக‌
சாமி எந்தப்பக்கம் விலகணும்னு
சொல்லுங்க.
கடவுள் இல்லாத பக்கத்தைச் சொல்லுங்க‌
விலகிக்கிறேண்ணு
சொன்னாராம்.
அப்போது தான் 
சங்கரருக்கு மண்டையில் அடித்தது
போல் இருந்ததாம்.
எங்கும் நிறைந்த ஆண்டவன்
என்ற உண்மையை உறைக்கும்படி
சொல்ல‌
ஒரு பஞ்சமன் தான் வேண்டியிருந்தது.
மானிட சமூக நீதி தான் 
இறைவத்தின் சிகரம் ஏறும் 
முதல் படிக்கட்டு.

தமிழ் நாட்டில்
எங்கும் உயிரும் காற்றுமாய்
உலவும் தமிழ் வீச்சு
கலைஞர் எனும் ஒலிப்பில்
அண்ணா எனும் ஒலிப்பில் 
இருக்கும்போது
ஏதோ வெற்றிடத்தை
நிரப்ப வந்திருக்கிறேன் என்று
பேசுவதே
கண்மூடித்தனமான திமிர்வாதம் அல்லவா?

தமிழர்களின் பிரச்னைகளில்
கொஞ்சம் கூட நனைந்து கொள்ளாமல்
ஏதோ ஒரு அரிதார மேடையில் நின்று
அவதாரம் போல் பேசுவது
தமிழ் மக்கள் உள்ளங்களை
காயப்படுத்துவதாகும்.
திராவிடம் என்றாலும் 
தமிழ் என்றாலும் 
அதுவே இங்கு 
கண்ணுக்கு த்தெரியாத 
இறையாண்மை.
இதை  வெற்றிடம் என்று 
பலூன் ஊதிக்கொண்டிருக்கும் 
பம்மாத்துக்காரர்களே!

ஆதிக்க வர்ணம் பூசிக்கொண்டு 
ஆள நினைக்கும் 
நிழற்பொம்மைக்களே!
இவர்கள் இங்கே மண்ணாங்கட்டிகள் அல்ல.
மக்கள் குரலே மகேசன் குரல் 
என்கிறார்களே 
அந்த ஜனநாயகத்தின் 
மின்காந்த விசை  ஊடுருவி நிற்கும் 
மண் வெளியும் விண்  வெளியும் 
எங்கள் தமிழ் வெளி ஆகும்.
சிந்து வெளியிலிருந்தே 
சிந்து பாடும் 
எங்கள் சிங்கத்தமிழ் 
உங்கள் ஆத்மிகப்பூச்சாண்டிகளையெல்லாம் 
உருக்குலையச்செய்திடும்.
தமிழ் வாழ்க ! தமிழ் வெல்க!

=============================================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக