வெள் நள் ஆறு
இரவு நடு நிசியில் நாய்கள் குரைக்கும் "வெறுமையான நடு இரவின் ஒரு நீண்ட வழியில்"கேட்கும் ஒலிக்கூட்டத்தினால் தூக்கம் வராமல் பிரிவுத்துயர் தீயில் புரளும் காதலியின் உள்ளம் படும் பாடு இது.தோழியின் மொழியில் அமைதிருப்பது. பொருள்வயின் பிரிந்த காதலன் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று தோழி அவள் படும் துன்பத்தை விரித்து உரைக்கின்றாள் அவனிடம். சங்க நடையில் 23.11.2014 அன்று நான் எழுதிய செய்யுட் கவிதை இது.
வெள் நள் ஆறு
======================================ருத்ரா இ.பரமசிவன்
ஞெமலி மகிழ்தரு வெள் நள் ஆறு
நீள ஒலிக்கும் புன்மைசெறி கங்குல்
அல்கு பொலம்வரி அணியிழை நெகிழ
மைபொதி விசும்பு விரியுளை அன்ன
மஞ்சுபரி ஏகும் உருகெழு வல்மா
நோதல் கதழ்த்து நெஞ்சகம் சிதைக்கும்.
ஓமை ஒளித்து பார்ப்புகள் கூட்டும்
வரிமணல் கீற வடியிலை எஃகம்
பசும்புண் பிளப்ப வெஞ்சமர் கூர
அலமரல் ஆற்றா அளியள் ஆகி
கம்பலை உற்று கண்மழைப் படூஉம்
மடமும் பயிர்ப்பும் உடைபடுத்தாங்கு
ஊழி பெயர்த்த பெருங்கல் கொல்லோ
பொடிபட வீழ்க்கும் சேக்கை கண்ணே.
பொருள் மறை செய்து பொருள் நசைபெருக்கி
பொரியும் தீச்சுரம் உள் உள் கடாஅய்
யாது ஆற்றினை?அழியுமென் அணிநிறை.
அரவு வாய்ப்படு மென்சிறை அம்புள்
ஆகுவள் அறிதி.வீடத்தருதி.
மலைபடு ஊர! மல்லல் சீர்த்து.
===============================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக