திங்கள், 14 அக்டோபர், 2019

கடல் நுரை போல் நரைத்த..




கடல் நுரை போல் நரைத்த...
========================================ருத்ரா 

கலைஞரின் சொல்லோவியம் 
கடற்கரையில் 
கவிதை எழுதியது.
காலம் எனும் கிழவன் 
நரைத்துப்போவதுண்டா?
நம் நரைத்த எண்ணம் 
இங்கு குமிழிகள் பூக்கின்றன.
பல பில்லியன் ஆண்டுகள் 
இளமையாய் இருப்பவன் அல்லவா 
காலம்!
காலனே உன்னை கை  கால் 
முளைத்தவனாய் 
உருவகப்படுத்த எண்ணினால் 
ஒரு எருமையின் மீது 
சவாரி செய்துகொண்டு 
"பாசக்கயிற்றை" சுழற்றிக்கொண்டு 
வருகிறாய்.
என்?
அப்படி  வேடம் புனைகிறாய்?
காலம் என்றால் 
தொடக்கப்புள்ளியும் 
முற்றுப்புள்ளியும் இல்லாத 
கோடு தானே?
எலக்ட்ரான் போன்ற 
இந்த உயிர் எனும் 
"உயிர்ட்ரானை "எங்கு கொண்டு செல்கிறாய்?
எங்கு வேண்டுமானாலும் 
கொண்டு செல்.
இதற்குள் தமிழ் எனும் 
ஒரு விசை இருக்கிறது.
போ!
அதை உன்னால் 
அழித்து விட முடியுமா?
அதோ அங்கு ஒலிக்கிறதே!
அவனை வேண்டுமானால் நீ 
மண்ணுக்குள் எலும்புகள் ஆக்கியிருக்கலாம்.
அதோ உற்றுக்கேள்.
உன் இருட்டு உலகங்களுக்கு கூட 
கை  விளக்காய் ஒளிப்பதைக்கேள்!

"யாதும் ஊரே !யாவரும் கேளிர்!
தீதும் நன்றும் பிறர் தர வாரா 
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன" 
......................

அந்த எருமையன் 
கொம்பு ஒடிந்து வீழ்ந்தான்!

==========================================












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக