புதன், 23 அக்டோபர், 2019

அந்த நுரையாடை.



அந்த நுரையாடை.
====================================================ருத்ரா

லாஸ் ஏஞ்சல்ஸின் வெஞ்சுரா கடற்கரை.
மாலைச்சூரியன்
இந்த ஈர மணல் விரிப்பில்
அவன் முண்டாசை அவிழ்த்து
பரப்பிவைத்து படுத்துக்கொண்டிருந்தான்.
வெள்ளையான கடற்குருகுகள்
எங்கோ தொலைவில்
இறக்கை பட படத்து இன்னொலியை
உதிர்த்து
சங்கத்தமிழில் ஒரு "குருகின் குறுந்தொகையாய் "
நிரவி நிரவி தனிமையை மீட்டியது.
நுரைக்கோடுகளும்
அங்கே ஏதோ எழுதின.
அந்த குறுந்தொகைக்கு நெடுந்தொகையாய்
அவை "நச்சினார்க்கினியர்"உரைகள்.
அந்தப் பறவைகளின் சிறகுகளில் கூட
ஏதோ பற்றிஎரிகிறதே !
என்ன அது?
அது ஈழம்.
அது தமிழ்.
மானிட பரிணாமத்தின்
உயிர்த்தாகம். அது.
அடக்குமுறை
எங்கேயாவது ஒரு சொட்டு விழுந்தால் கூட
எங்கள் அசுரக்கைகள்
பார்த்துக்கொண்டு சும்மா இராது
என்று
பிரகடனம் செய்யும் அமைப்புகள் கூட
வெறும் "மிக்ஸர் பொட்டலம்"
கொறிப்பவை ஆகிப்போன
நாகரிகத்தின் உச்சியில் இருந்துகொண்டு
இந்த அறமற்ற செயல்களை
உச்சி மோந்து
உலக கீதம் பாடிக்கொண்டிருக்கின்றன.
கடற்கரையின்
அந்த நுரையாடை
பிணம் போர்த்திய சல்லாத்துணியாய்
படர்ந்து நெளிகின்றது.

===========================================================










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக