புதன், 23 அக்டோபர், 2019

ஒரு "உல்ட்டா"

ஒரு "உல்ட்டா"
==========================================ருத்ரா.

அன்றொரு நாள்
அந்தப்பகுதியில்
இது வரை இல்லாத அளவுக்கு
ஒரு மின்னல் அடித்தது.
கோடிக் கோடி மடங்கு
அதிக ஆற்றல் உள்ளதாய்
அது இருந்தது.
அதிலிருந்து வந்த‌
ஏதோ விதமான காமாக்கதிர்கள்
பூமியின்
டி என் ஏ, ஆர் என் ஏ வுக்குள்
புகுந்து
படைப்பின் "பாஸ்வர்டை "
மாற்றிக்கொண்டது.
.............
..............
அந்த ஆற்றங்கரையோரம்
இருந்த நண்டுகளும் நத்தைகளும்
திடீரென்று
கிருஷ்ணபகவான் காட்டிய‌
விசுவரூபமாய்
ஊருக்குள் படையெடுத்தன.
ஆமாம்
ஊருக்குள் மனிதப்பூச்சிகள்
ஒன்றைக்கூட காணோமே.
ஆம்
அவர்கள் எல்லாம்
"அரை அங்குல" அளவுக்கு
குறுகிப்போன‌
பூச்சி புழுக்கள் ஆனார்கள்.
நண்டுகளும் நத்தைகளும்
தங்கள் காலைஉணவு தேடி
ஊருக்குள் வந்தன.
ஆகா!
அவைகளுக்கு வாயில் எச்சில் ஊறின.
மனிதப்பூச்சிகளையும் புழுக்களையும்
கண்டு அவை
மிக உற்சாகம் கொண்டன.
நண்டுகளின் கொடுக்குகளில்
கொத்து கொத்துக்களாய்
மனிதப்பணியாரங்கள்.
நத்தைக்ளோ
மனிதப்புழுக்களை
"லார்டு லபக் தாஸ்களாய்"
விழுங்கித்தீர்த்தன!
நண்டுக்குழம்பும் நத்தைக்குருமாவுமாக
சுவைக்கப்பட்டவை
அதே நண்டுகளுக்கும் நத்தைகளுக்கும்
மனிதக்குழம்பும் குருமாவுமாய்...
அய்யய்யோ!
என்ன கொடூரம் இது!..
..............
.................
"நாதா!
இது என்ன?
உங்கள் புது சேட்டை?"

"சேட்டை என்று கூறாதே.
திருவிளையாடல் என்று சொல்."

"எதற்கு இது?"

"அன்பே சிவம்" என்று
பிரதோஷம் தோறும்
கூச்சல் போடுகிறார்கள்.
ஆம்.
எல்லா உயிரும் சிவம்.
எல்லா சவங்களிலும் சிவம்.
மண்ணிலும் மலத்திலும் கூட.."

"போதும் போதும் நிறுத்துங்கள்"
(மூக்கைப்பொத்திக்கொள்கிறாள்)

"தேவி!
அந்த அன்பு
இன்னொரு அன்பைத் தின்கிறது.
செரிக்கிறது.
கொழுக்கிறது.
பக்தி செழிக்கிறது..."
பரமேஸ்வரன் சிரிக்கிறார்.

"ஹா..ஹா.ஹ்ஹா"
அவர் கையில் இருந்து சூலமும்
சிரிக்கிறது.
............
............

"போதும் எழுந்திருங்கள்!
என்ன‌ சிரிப்பு இது!
விடிய  விடிய
அந்த புராணக்கச்சேரிகளைக்
கேட்டுக் கேட்டு
தூங்கியது போதும்.எழுந்திருங்கள்!"
இந்த தேவி
வீட்டுத்தேவனை
உலுக்கி எழுப்பினாள்.

=============================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக