வியாழன், 10 அக்டோபர், 2019

வெள்ளிப்பிழம்பில் ஒரு பிரசவம்.






வெள்ளிப்பிழம்பில் ஒரு பிரசவம்.
================================================
ருத்ரா இ பரமசிவன்.



அமெரிக்காவில்
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்
ராக் ஃ பீல்டு எனும்
மலை ஓரப்பூங்காவில்
கீற்றுக்கூந்தலை
தலைவாரிக்கொள்ளும்
இரு மரங்களைக்கண்டேன்.
சூரியனின் வெள்ளிக்கதிர் கொண்டு
செய்யப்பட்ட "சீப்பில் "
அவை ஒப்பனை செய்யும் அழகில்
மயங்கிப்போனேன்.
சூல் கொண்ட மகளிர் போல்
கனவுகளை
பாரம் சுமந்துகொண்டிருந்தன அவை.
இன்னும்
சற்று நிறத்தில்
"அந்தியின்" கன்னிக்குடம் உடைந்து
சிவப்பாய் வழியும் வானத்துக்கு
மறைப்பு காட்ட வந்திருக்கும்
நீலத்திரையாய்
வானச்சீலை
பின்னணி காட்டும் சித்திரத்தில்
இந்த பிரபஞ்சத்தின்
பிரசவ விளிம்பு
மௌனத்தின் வலியை
ஒலியில்லாமல்
ஒலி பரப்பிக்கொண்டிருக்கிறது.
ஒளியின் வெள்ளிப்பிழம்பில்
கண் கூசுகிறது.
பெருவெடிப்பு எனும்
"பிக் பேங்கின் "
பிஞ்சுத்துடிப்புகள்
கீற்றுகளின் சல்லடையில்
ஒழுகி ஒழுகி
சொட்டும் அந்த
தேன் காட்சியை
இந்தக்காகிதத்தில்
அந்த பேனா
சப்புக்கொட்டி சப்புக்கொட்டி
சொற்களைக்
கொட்டித்தீர்த்தது.

====================================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக