ஒரு படையெடுப்பு
====================================ருத்ரா
வெட்டுக்கிளிகள் மொத்தமாய்
படையெடுத்து
பச்சைப்பயிர்களை
தின்று தீர்த்துவிட்டனவே.
ஆனால்
பட்டாம்பூச்சிகள் தானே
மொத்தமாய் சேர்ந்து வந்து
உருண்டு திரண்டு ஒரு
வர்ணப்பிரளயம் உருவாக்கினால்
அழகாய்த்தானே இருக்கும்
என்று எண்ணினேன்.
ஆனால்
அன்பே
உன் பெருமூச்சுகள் எனும்
அந்த பட்டாம்பூச்சிகளின்
படையெடுப்பால்
நான்
எங்கோ தொலைந்தேன்.
என் பேச்சும் இல்லை
மூச்சும் இல்லை.
ஒரு மூளிவானம்
நம் இடையே
ஒரு பிரம்மாண்டமானதொரு
மௌனத்தை அல்லவா
விசுவரூபம் காட்டிக்கொண்டிருக்கிறது!
===========================================
====================================ருத்ரா
வெட்டுக்கிளிகள் மொத்தமாய்
படையெடுத்து
பச்சைப்பயிர்களை
தின்று தீர்த்துவிட்டனவே.
ஆனால்
பட்டாம்பூச்சிகள் தானே
மொத்தமாய் சேர்ந்து வந்து
உருண்டு திரண்டு ஒரு
வர்ணப்பிரளயம் உருவாக்கினால்
அழகாய்த்தானே இருக்கும்
என்று எண்ணினேன்.
ஆனால்
அன்பே
உன் பெருமூச்சுகள் எனும்
அந்த பட்டாம்பூச்சிகளின்
படையெடுப்பால்
நான்
எங்கோ தொலைந்தேன்.
என் பேச்சும் இல்லை
மூச்சும் இல்லை.
ஒரு மூளிவானம்
நம் இடையே
ஒரு பிரம்மாண்டமானதொரு
மௌனத்தை அல்லவா
விசுவரூபம் காட்டிக்கொண்டிருக்கிறது!
===========================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக