சனி, 6 ஜூன், 2020

நச்சுன்னு ஒரு அவதாரம்.

நச்சுன்னு ஒரு அவதாரம்.
----------------------------------------------------ருத்ரா 

மீன் அவதாரம் 
ஆமை அவதாரம்
பன்றி அவதாரம்  
மனித சிங்க அவதாரம் 
கோடரி அவதாரம் 
கலப்பை அவதாரம் 
மயில்பீலி கிரீட அவதாரம் 
தாழங்குடை அவதாரம் 
முறிந்த வில் அவதாரம். 
எல்லாம் சரி தான் 
பத்தாவதுக்கு மட்டும் 
யாரோ குதிரையில் 
வருகிறாராமே!
வந்தே விட்டது.
அது குதிரை அல்ல.
நம் நச்சு சாஸ்திரங்களின்
அடையாளமாய் அந்த  
நச்சுக்கிருமியே தான்.

--------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக