"பல ராமன்கள்"
==================================ருத்ரா
ராமர் மீது பாபரா? என
கர்ஜித்தீர்களே!
இப்போது அங்கே==================================ருத்ரா
ராமர் மீது பாபரா? என
கர்ஜித்தீர்களே!
புத்தர் அல்லவா
புன்னகை பூக்கிறார்.
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியைக்
கேட்டால் சொல்லுவார்.
பாபரோடும் புத்தரோடும்
ஐக்கியமானேன்..
ராமன் எத்தனை ராமனடி?
என்றெல்லாம் பாடுபவர்கள் தானே
நீங்கள்.
இதோ இப்போது இந்த ராமன்
சர்வமத சமரச ராமன்!
...........
.............
கடப்பாரை ராமர்கள்
ஓங்கிய கடப்பாரையை
ஓங்கியபடியே தான் இருக்கிறார்கள்.
நமது அச்சம் இது தான்.
ஓங்கிய கடப்பாரை தாக்கியதில்
"ஒரு ராமன்
பொடிப்பொடியாகி
"பல ராமன்" ஆகிவிடுவானோ
என்பது தான்.
ஆம்!
அதோ
அணிவகுத்து வந்து கொண்டிருக்கிறார்கள்
புலம் பெயர்ந்த
பாரத புத்திரர்களாய்
பலப் பல ராமர்களாய்
அக்கினி குழம்பாய் கொதிக்கும்
அந்த தார் ரோடுகளில்
வந்து கொண்டிருக்கிறார்கள்.
============================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக