ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்குப்பிறகு...
______________________________________________ருத்ரா
உயிர் போகிற அவசரத்திலும் கூட..
உயிர் காக்கவேண்டிய சிறிய தருணங்களிலும் கூட..
ஒரு ஓட்டைப்படகு ஒன்று மூழ்கிக்கொண்டிருக்கும்போது கூட...
காதலின் முத்தமிடும் உதடுகள் இணைந்துகொள்ளும்
அந்த நுண்ணிடைவெளியிலும் கூட...
நாட்டின் ஜனநாயகம் மொத்தமாய் கொள்ளை போகும்
நெருக்கடியை அவசியமாய் காட்சிப்படுத்தும்போது கூட...
................
....................
இந்த நேரங்கெட்ட நேரத்தில்
ஊடகங்களின் ஆரண்யகாண்டத்தில்
எங்கோ ஒரு மூலையில்
கொள்ளை லாபத்தின்
ஒரு சொட்டு உதிரும் நேரம்
அவர்களுக்கு.
பொய்கள் எனும் விளம்பரங்களை
மீன்கள் போல பரப்பி
கூவி கூவி விற்கும் இந்த
சந்தைக்கூச்சலில்
நாம் தோலுரிக்கப்படுகிறோம்.
நம் மாண்புகள்
நம் கண்ணியங்கள்
எல்லாம்
கண்ணுக்குத்தெரியாத அந்த
துச்சாதனர்களிடம்
சிதைக்கப்படுகிறது.
சமுதாய மானிடம்
மானிட சமுதாயத்தில்
சவமாகப்போனதோ?
==================================================ருத்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக